“தொடுவானம் உனக்கடா.. தோல்விகள் எதற்கடா”.. ஈழத்து கலைஞர்களின் உயிரோட்டமான பாடல்
இலங்கையைச் சேர்ந்த கலைஞர்கள் ”தொடு வானம்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள உணர்வுப்பூர்வமான பாடல் தற்போது வைரலாகி வருகின்றது.
தொடுவானம் உனக்கடா... தோல்விகள் எதற்கடா... என்ற வரிகளில் காணப்படும் குறித்த பாடலுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த பாடலின் வரிகள் அனைத்தும் வலி மிகுந்ததாகவே இருக்கின்றது.
பாட்டின் வரிகள், மியூசிக், பாடகரின் அருமையான குரல் இவை அனைத்து ஒட்டுமொத்த ஈழத்து மக்களை கட்டிப்போட்டது மட்டுமின்றி, இவ்வாறான சமூக அக்கறை உள்ள கலைஞர்களே தற்போது நாட்டிற்கு தேவை என்ற எண்ணத்தினையும் மக்களிடையே தோன்ற வைத்துள்ளது.
மேலும் சமூகத்தில் நெரி தவறி நடப்பவர்களின் பாதையினை மாற்றக்கூடிய சக்தி இத்தகைய கலைஞர்களாலே முடியும் என்பது அசைக்கமுடியாத உண்மை... தன்னிலை மறந்து கண்களில் கண்ணீரை வரவழைக்கும் இப்பாடல் இலங்கை மக்களின் பாராட்டுக்களை குவித்து வருவதுடன், இத்தகைய அருமையான வரிகளை தற்போது நீங்களும் கேட்கலாம்.