சீனர்கள் காலையில் குளிக்க மாட்டார்களாம்: ஏன்னு தெரியுமா?
மக்கள் பொதுவாக காலையில் குளிப்பதை தான் வழக்கமாக வைத்துள்ளனர்.
காலையில் குளித்தால் தான் உடல் எப்போதும் புத்துணர்ச்சியாகவும் உட்சாகமாவும் இருக்கும் என வழக்கப்படுத்தி கொண்டுள்ளனர்.
ஆனால் சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் இரவில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சீனர்கள்
ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இரவில் குளிப்பதற்கான காரணம் இரவில் குளிப்பது தினசரி சுகாதாரத்தின் இன்றியமையாததாக கருதப்படுகிறது.
இந்த இரவு குளியல் பகலில் வெளியில் சென்று வரும்போது உடலில் நுண்கிருமிகள் ஒட்டிக்கொண்டிருந்தால் அவற்றை சுத்தப்படுத்தி, நிம்மதியான உறக்கத்தை கொடுப்பதால் சீனர்கள் இதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் பணிகளில் ஈடுபடும் மக்கள் அதிக வியர்வை சிந்த வேண்டிய சூழல் உள்ளது. அதனால் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க இந்த இரவு குளியல் முக்கிய பங்காற்றுவதாக சீனர்கள் கருதுகின்றனர்.
காலை முதல் இரவு வரை தொடர்ந்து வேலை செய்வதால், வேலை முடிந்து ஓய்வெடுக்கும் நேரத்தில் குளிப்பதை வழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |