திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது? அடையாளமே தெரியலயே!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திருப்பாச்சி திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்த நடிகை மல்லிகாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருப்பாச்சி
தளபதி விஜயின் சினிமா பயணத்தில் திருப்பாச்சி திரைப்படத்துக்கு முக்கிய இடம் உண்டு. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் குறிப்பாக குடும்ப திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
திருப்பாச்சி படத்தின் மூலம் தான் இயக்குனர் பேரரசு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து கடந்த 2005 ஆம் ஆண்டு விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியான இப்படம் கில்லி படத்திற்கு பிறகு, விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது என்று சொல்லாம்.
இந்த திரைப்படத்தில் பலரது வரவேற்பையும் பெற்ற கதாபாதத்திரமான மல்லிகாவின் தங்கை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பராட்டுக்களை குவித்தது.
தமிழில் சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை மல்லிகா. தொடர்ந்து திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவர் விஜயுடன் சேர்ந்து செய்யும் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுன்றது. திருமணத்தின் பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கும் மல்லிகாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள்.
இந்நிலையில், நடிகை மல்லிகா குடும்பத்துடன் இருக்கும் தற்போதைய புகைப்படங்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருவதுடன், அடையாளமே தெரியாமல் மாறிய மல்லிகா குறித்து கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
