வலைக்குள் சிக்கிய பாம்பு! மீட்டு தாகத்தை தீர்த்த நபர்
பாம்பை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை பயம் தான். பொதுவாக பாம்புகளை கண்டால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அங்கிருந்து ஓடி விடுவார்கள்.
ஆனால், நமக்கு அச்சத்தை கொடுக்கும் பாம்புகளை அருகாமையில் பார்க்க சமூக வலைத்தள வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான விஷயங்களையும், உண்மைகளையும் நாம் இந்த வீடியோக்களில் பார்க்கிறோம்.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன என்றாலும் சமீப காலங்களில் குறிப்பாக பாம்பு வீடியோ எளிதில் வைரலாகிறது.
தற்போதும் வலையில் அகப்பட்டு சிக்கி கொண்ட ராஜ நாகத்தை காப்பாற்றி அதன் தாகத்தை ஒரு நபர் தணிக்கும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு நபர், மீன்வலையில் சிக்கிய மிகப்பெரிய நாகப்பாம்பை விடுவித்து அதன் தாகத்தை தணித்து வைக்கிறார். அந்த வீடியோ மிகவும் வியப்பைக் கொடுக்கிறது.
வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒடிசாவின் பத்ராக் பகுதியில் உள்ள சுமார் 6 நாட்களாக மீன் வலையில் சிக்கித் தவித்த ஒரு பெரிய விஷ நாகப்பாம்பு உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டது.
தாகத்துடன் இருக்கும் பாம்புக்கு ஒரு பாட்டில் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. பாம்பு அதனை மிக வேகமாக அருந்துவதில் இருந்து அது எவ்வாறு தாகத்தினால் தவித்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.