முதல் காதலில் மண்ணை கவ்வும் 3 ராசிக்காரர்கள்! உங்கள் ராசி இதில் இருக்கா?
பொதுவாக காதலுக்கு சாதி, மதம், இனம், நேரம், காலம் இது ஏதுவும் தேவையில்லை என அனைவரும் கூறுவார்கள்.
ஆனால் காதலிக்கும் போது இவை தேவையில்லை. மாறாக வாழ்க்கையில் சந்தோசமாக வாழ வேண்டும் என்றால் மேற்குறிப்பிட்ட அனைத்தும் தேவை.
அந்த வகையில் காதலிப்பவர்களுக்கு ராசிகள் பொருத்தம் என்ற ஒரு விடயம் இருக்கின்றது.
இதனை பாராமல் நாம் எதையாவது செய்யும் போது காதல் தோல்விக்கு ஆளாவார்கள் என்பதை இங்கு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் காதலர்களுக்கு இடையில் இருக்கும் மனக்கசப்பை நம்மை சார்ந்தவர்களிடம் காட்டுவதற்கு முன் வருவோம்.
இதன் காரணமாக பிரச்சினை வேறு விதமாக சென்று இறுதியாக பிரிவில் முடியும்.
இது போன்ற பிரச்சினைகளை தடுக்க வேண்டும் என்றால் எந்த ராசிக்கு யார் சரியாக வருவார் என்பதனை தொடர்ந்து நாம் தெரிந்துக் கொள்வோம்.
முதல் காதலில் மண்ணை கவ்வும் ராசிகள்
1. மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் அவசரப்பட்டு எதையாவது செய்து விடுவார்கள். இதனால் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இவர்களுக்குள் இருக்கும் பொறுமையின்மை இவர்களை தவறான முடிவை எடுக்க வைக்கும். இதனால் துணையை சரியாக கவனிக்காமல் இருந்து விடுவார்கள்.
2. மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் எவ்வளவு விரைவாக ஒருவரை பார்க்கிறார்களோ அவ்வளவு விரைவாக அவர்களை விட்டு பிரிந்து விடுவார்கள். மேலும் முதல் காதலின் உறுதித் தன்மையை இழந்து, அந்த உறவையும் இழந்து விடுவார்கள். சிந்தனை ரீதியாக பார்க்கும் போது இரட்டை சிந்தனை கொண்டவர்கள்.
3. சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்கள் நம்மை பாராட்ட வேண்டும் என நினைப்பார்கள். அன்பு நிறைந்தவர்களாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தாமல் இருப்பார்கள்.இயல்பான குணம் என்பதால் இவர்களின் முதல் காதல் நிலையானதாக இருக்காது.