இந்த ராசிக்காரங்க சத்தியத்தை காப்பாற்றவே மாட்டாங்க... எந்தெந்த ராசினு தெரிஞ்சிக்கோங்க
Never Keep Promise Zodiac: கொடுத்த வாக்கு அல்லது சத்தியத்தினை காப்பாற்றாத ராசியினர் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக கொடுத்த வாக்கை அல்லது சத்தியத்தினை காப்பாற்றுவது இந்த குணம் இருந்தால் மிகப்பெரிய நல்லதாகும்.
சிறிய உதவியாக இருந்தாலும் பெரிய பொறுப்பாக இருந்தாலும் சரி நமது வாக்குறுதியை மீறுவது என்பது உறவில் பாதிப்பினை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சில ராசியினர் தாங்கள் கொடுத்த வாக்குறுதியையோ அல்லது சத்தியத்தையோ மறந்துவிடவோ அல்லது கவனக்குறைவாக விட்டுவிடவும் வாய்ப்புள்ளது.
சில ராசியினர் அதனை வேண்டும் என்றே செய்வதில்லை. அவர்களின் ஆளுமை மற்றும் ஆளும் கிரகங்களால் இவைகள் நிகழ்கின்றதாம்.
மேலும் இந்த குணத்தினால் பலரும் அவர்களை நம்பாமல் இருப்பதுண்டு. அந்த வகையில் எந்தெந்த ராசியினர் கொடுத்த வாக்குறுதியை அடிக்கடி மீறுவார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
மிதுனம்
கிரகங்களின் இளவரசனாக புதனால் ஆளப்படும் மிதுன ராசியினர் சமூக பட்டாம்பூச்சிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
அதீத உற்சாகத்தினால் அளவுக்கு அதிகமான வாக்குறுதிகளை அளித்துவிடுவதுடன், அதனை மறந்துவிடவும் செய்வார்கள்.
காரணம் அவர்களின் மனம் வேகமாக செயல்படுவதுடன், புதன் கிரகத்தினால் ஆளப்படுவதும் ஒரு காரணமாக இருக்கின்றது. ஆனால் சொன்னதை செய்து முடிப்பதில் இவர்கள் திறமையானவர்கள் ஆவர்.

தனுசு
தனுசு ராசியினர்கள் சாகசப்பிரியராகவும், சுதந்திரத்தினை விரும்புகிறவர்களாகவும் இருக்கின்றனர். விதிகள் மற்றும் வாக்குறுதிகளால் கட்டுப்படுத்தப்படுவதை வெறுப்பார்கள்.
மற்றவர்களிடம் சிக்கிக்கொள்வதாக உணர்ந்தால், யாரிடமும் கூறாமல் தங்களது திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை உடனடியாக மாற்றிவிடுவார்கள்.
முன்னேற்றத்திற்கான கிரகமான குருபகவானால் ஆளப்படும் நிலையில், பெரிய கனவுகளை காணச் செய்தாலும், சில சமயங்களில் வாக்குறுதியை புறக்கணிக்க வைக்கின்றது.
அவர்கள் உங்களுக்கு ஒரு விடயத்தினை செய்வதாக வாக்களித்துவிட்டு வேறு வேலைக்கு சென்றுவிடுவார்களாம்.

மீனம்
உணர்திறன் மிக்கவர்களாகவும், மிகவும் கனிவானவர்களாகவும் இருக்கும் மீன ராசியினர் மற்றவர்களைக் காயப்படுத்தக்கூடாது என்பதற்காக அனைத்திற்கும் சரி என்று கூறுவிடுவார்கள்.
மனதிற்குள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தயாராக இல்லை, தங்களால் முடியாது என்று தெரிந்தாலும் அதை செய்வார்கள்.
இவர்கள் பெரும்பாலும் கற்பனை உலகில் வாழ்வதால், நிஜ வாழ்க்கையில் கடமைகளை மாற்றிவிடுவார்கள். ஆனால் யாரையும் ஏமாற்ற விரும்பமாட்டார்கள்.
ஆனால், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போவதால் மற்றவர்களை ஏமாற்றும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மேஷம்
மேஷ ராசியினர் துணிச்சலானவர்களாகவும், அளவில்லாத ஆற்றல் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். காரியததினை தொடங்க நினைப்பார்கள். ஆனால் பாதியிலேயே ஆர்வத்தினை இழந்துவிடுவார்கள்.
ஒரு விடயத்திற்கு வாக்குறுதியை கொடுத்த பின்பு அதன் மீது உள்ள ஆர்வம் குறைந்த பின்பு அடுத்த காரியத்திற்கு சென்றுவிடுவார்களாம்.
செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் நெருப்பு ராசியான மேஷ ராசியினர், செயலில் இறங்குவதிலும் முனைப்பு காட்டுவார்கள்.
இவர்கள் பெரும்பாலும் தூண்டுதலின் பேரிலேயே செயல்படுவார்கள். அதுமட்டுமின்றி எளிதில் வாக்குறுதியை மறக்கவும் செய்வார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |