நவம்பர் 22 ல் உருவாகும் ராஜயோகம்: 3 ராசிக்கு தாறுமாறாக உயரும் வருமானம்
Venus Make Malavya Rajyog: சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு செல்ல இருக்கும் நிலையில், உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் வருமானம் உருவாக உள்ளது.
சுக்கிரன் பெயர்ச்சி
சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணியாக இருக்கும் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதியாக இருக்கின்றார்.
சுக்கிரன் நீச்சமடையும் ராசியான கன்னி ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணித்து வரும் நிலையில் நவம்பர் 22ம் தேதி தனது சொத்த ராசியான துலாம் ராசிக்குள் மீண்டும் நுழைய உள்ளார்.
இந்நிகழ்வினால் பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களுள் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாக உள்ளது. இத்தருணத்தில் புதனும் துலாம் ராசியில் இருப்பதால் இந்த கிரகங்களின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகியுள்ளது.
இத்தருணத்தில் அனைத்து ராசியினரின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படும் நிலையில், சில ராசியினருக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் புத்தாண்டு முதல் இருப்பதால் புதிய வருடத்திலும் சில ராசியினர் செழிப்பான ராஜவாழ்க்கை அடைவார்கள். அந்த வகையில் வருமானம் பெருகி மகிழ்ச்சியாக வாழும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
சுக்கிரன் மேஷ ராசியில் 7வது வீட்டிற்கு செல்வதால் உருவாகும் இந்த ராஜயோகத்தினால் சாதகமான பலன்கள் கிடைப்பதுடன், வணிகத்தில் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
நல்ல லாபம் தரும் புதிய ஒப்பந்தம் கிடைப்பதுடன், முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்பும் தேடிவரும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
நீண்ட காலமாக வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதுடன், திருமண வாழ்க்கையில் பிரச்சனை விலகி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி
கன்னி ராசியினருக்கு சுக்கிரன் 2வது வீட்டிற்கு செல்ல உள்ளதுடன், இந்த ராஜயோகத்தினால் வாழ்க்கை செழிப்பாக மாறுமாம்.
பணம் சம்பாதிப்பதற்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், நீண்ட காலமாக மற்றவர்களிடமிருந்து வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
புதிய தொழிலை தொடங்க நல்ல வாய்ப்பு கிடைப்பதுடன், நீண்ட கால இலக்குகளையும் அடைவீர்கள். தேவையற்ற செலவுகள் வரும் என்பதால் செலவினை கட்டுப்படுத்தவும்.

துலாம்
துலாம் ராசியில் சுக்கிரன் முதல் வீட்டில் செல்லும் நிலையில், உருவாகும் இந்த ராஜயோகத்தினால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மேலும் வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றியாக முடியும். பணியிடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |