சுக்கிர பெயர்ச்சி 2026: பணக்கஷ்டத்தால் நிலைகுலையும் ராசிகள் யார் யார்? பரிகாரங்கள் இதோ
சுக்கிர பெயர்ச்சியினால் சில சிக்கல்களை சந்திக்கும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சுக்கிர பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றம் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் ஜுலை 4ம் தேதி சுக்கிரன் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
இந்த பெயர்ச்சியானது சில ராசியினருக்கு நன்மையை அளிக்கின்றது. சில ராசியினருக்கு அசுப பலன்களை அளிக்கின்றது. அந்த வகையில் எந்தெந்த ராசியினருக்கு அசுப பலன்கள் ஏற்படுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
ரிஷப ராசியினரின் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் வரலாம். வீட்டில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். சொத்து, வாகனம் வாங்கும் விடயத்தில் அவசரப்படாமல் இருப்பது நல்லது.
நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால், பட்ஜெட் போட்டு செலவு செய்வது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக இருக்கவும். வாக்குவாதத்தினையும் தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மி அம்மனுக்கு நெய் தீபமேற்றி, வெள்ளை நிற பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடவும். வசதியற்ற பெண்கள், பெண் குழந்தைகளுக்கு இனிப்புகளை தானமாக கொடுக்கவும்.

கன்னி
கன்னி ராசியினர் வேலை மற்றும் வியாபாரத்தில் கூடுதலாக கவனம் இருப்பது நல்லது. வேலையில் தாமதம், மேல் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
வியாபாரத்தில் பெரிய முதலீட்டை செய்வதற்கு முன்பு நன்றாக யோசித்து செயல்படவும். அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டும். மன அழுத்தம் உடல்நலத்தை பாதிக்கும் நிலையில், மற்றவர்களின் சண்டையில் தலையிடாமல் இருக்கவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. "ஓம் சுக்ராய நமஹ" என்ற மந்திரத்தை 24 முறை உச்சரிக்கவும். வெள்ளை நிறப் பசுமாட்டிற்கு வெள்ளிக்கிழமை சர்க்கரை பொங்கல் உணவாக கொடுக்கவும்.

மகரம்
மகர ராசியினர் பண விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கைக்கு வர வேண்டிய பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம்.
கடன் கொடுக்கும் முன்போ அல்லது புதிய முதலீடு செய்யும் முன்போ நன்றாக யோசித்து செயல்படவும். திருமண வாழ்க்கையில் சின்ன சின்ன விடயங்களுக்கு சண்டை ஏற்படலாம், பேச்சில் நிதானம் தேவை.
பரிகாரம்: சுக்கிர பகவானின் அதிதேவதையான ஸ்ரீ ரங்கநாதர் அல்லது பெருமாளை சனிக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வாருங்கள். ஏழை எளியவர்களுக்கு அல்லது துப்புரவுப் பணியாளர்களுக்கு முடிந்த பண உதவி, வெள்ளை நிற ஆடைகளை தானமாக வழங்கவும்.

கும்பம்
கும்ப ராசியினருக்கு சுக்கிர பெயர்ச்சியானது சவால்களை கொண்டு வருமாம். வாழ்க்கை துணை அல்லது தொழில் பார்ட்னருடன் தவறான புரிதல் அதிகரிக்கும்.
எந்த பிரச்சனையையும் அமைதியாக பேசி தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில் போட்டி அதிகரிக்கலாம். முழு கவனம் செலுத்தவும்.
உடல்நலத்தில் அலட்சயமாக இருக்க வேண்டாம். தினசரி பழக்கவழக்கங்களை சரியாக பின்பற்றவும்.
பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதுடன், வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சன்னதியில் உள்ள சுக்கிர பகவானுக்கு மொச்சைப்பயிறு நைவேத்தியம் செய்து, வெள்ளை வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள். பறவைகளுக்கு, குறிப்பாக புறாக்களுக்கு தானியங்களையும் தண்ணீரையும் தினமும் உணவாக வையுங்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |