குருபகவானின் நட்சத்திர மாற்றம்.... பணவரவை தக்கவைக்கும் 3 ராசியினர் யார்னு தெரியுமா?
குரு பகவானின் நட்சத்திர மாற்றத்தினால் பணவரை தக்கவைத்து, அதிர்ஷ்டத்தினைப் பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குருவின் நட்சத்திர மாற்றம்
ஜோதிடத்தில் குருபகவான் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றார். குரு என்று எழைக்கப்படும் வியாழன் கிரகம், ஞானம், செல்வம் மற்றும் முன்னேற்றத்தின் அதிபதியாகக் கருதப்படுகின்றார்.
குருவின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசியினருக்கும் குறிப்பிட்ட தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. ஜுலை 19 அன்று குரு பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழைகின்றார்.
ஜோதிடத்தில் இந்த கிரக மாற்றம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது. பூச நட்சத்திரம் பொதுவாக 27 நட்சத்திரங்களின் அரசனாக கருதப்படுகின்றது.
குருபகவான் இந்த நட்சத்திரத்திற்குள் நுழைவது வளர்ச்சி, செல்வம், அறிவு மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும் நிலையில், இதனால் நன்மையினைப் பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த நட்சத்திர மாற்றத்தினால் நிதி நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் நல்ல மாற்றத்தினைக் காணலாம்.
நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் தற்போது திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. முதலீடுகள் பெரிய லாபத்தினைக் கொடுக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை வலுவடையும்.
வேலையினை மாற்ற நினைப்பவர்களுக்கு இந்த காலக்கட்ட சிறப்பான காலமாகும். குடும்பத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவுவதுடன், பூர்வீக சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும்.

கடகம்
குருவின் இந்த நட்சத்திர பெயர்ச்சி கடக ராசியினருக்கு சாதகமான பலனை அளிப்பதுடன், பணியிடத்திலும், சமூகத்திலும் நல்ல பெயரை பெற முடியும்.
புத்திசாலித்தனத்திற்கும் எடுக்கும் முடிவு சுற்றியுள்ளவர்களின் பாராட்டை பெற்றுத்தரும். வியாபாரத்தில் ஒப்பந்தம் விடயமாக நல்ல முடிவை இந்த காலக்கட்டத்தில் எடுக்கலாம்.
பொருளாதார நிலை மேம்படுவதுடன், மன அழுத்தம் குறைந்து அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த நட்சத்திர பலன் நேர்மறை ஆற்றலை ஏற்படுத்துவதுடன், நிலுவையில் இருந்த பணிகள் வெற்றியாக முடிவடையும்.
அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்பதுடன், வேலையிலும் நல்லதொரு முன்னேற்றத்தினை அடைவீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் படிப்பில் அதிக முன்னேற்றம் அடைவதுடன், புதிய ஒப்பந்தம் மூலம் நல்ல லாபத்தினை பெறுவதற்கு இவை சிறந்த காலக்கட்டமாகும்.
மொத்தத்தில் இது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே சிறப்பான பலன்களை அளிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |