இப்படிப்பட்ட வகையில் தானம் செய்வது உங்களை ஏழையாக்கிவிடும்! எச்சரிக்கும் சாணக்கியர்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும், ஒரு சிறந்த இராஜதந்திரியாகவும் மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிிரசித்தி பெற்றவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
சாணக்கியரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. சாணக்கியர் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் எந்த தானம் செய்யும் குறிப்பிட்ட சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவில் நீங்கள் நல்ல நோக்கம் கருதி செய்த தானம் உங்களையே வறுமையில் தள்ளிவிடும் என சாணக்கியர் எச்சரித்துள்ளார்.
சாணக்கியரின் கருத்து பிரகாரம் தானம் செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தானம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
சாணக்கிய நீதியின் பிகாரம் தானம் செய்வது நல்ல பண்பாக இருந்தாலும், தன்னிடம் எதுவும் மீதமின்றி அளவுக்கு அதிகமாக வழங்குவது நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
மேலும், தகுதியற்றவர்களுக்கும் நன்றியுணர்வு இல்லாதவர்களுக்கும் தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.தானத்தின் பயன் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கும் அதை சரியாக பயன்படுத்தக்கூடியவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பது தான்.

அளவுக்கு மீறிய தானம் செய்ததால் அரசர்கள்கூட வறுமையை சந்தித்ததாக வரலாற்றில் உதாரணங்கள் உள்ளன. எனவே, தனது பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மட்டுமே மற்றவர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.இல்லையேல் அதுவே உங்களை ஏழ்மையில் தள்ளிவிடும்.
அதேபோல், யோசிக்காமல் அல்லது பிறருக்குக் காட்டிக்கொள்வதற்காக செய்யப்படும் தானத்தால் உண்மையான புண்ணியம் கிடைக்காது. மாறாக, அது பொருளாதார சிக்கல்களையே ஏற்படுத்தும் என சாணக்கியர் எச்சரித்துள்ளார்.

எனவே, தானம் செய்வதற்கு முன் நன்கு சிந்தித்து, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து, தன் வசதிக்கு ஏற்ற அளவில் உதவி செய்வதே சிறந்தது. தானம் செய்யும் முன்னர் இவர்களுக்க உண்மையில் அது பயனளிக்குமா என்றும் அதை செய்வதற்கு உங்களிடம் போதியளவு பணம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து செய்ய வேண்டும் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |