அன்னாசிபழத்தினை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
சத்துக்கள் அதிகம் கொண்ட அன்னாசி பழத்தினை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அன்னாசி பழம்
அன்னாசி பழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்தும், அதிகளவில் நார்ச்சத்தும் உள்ளது. குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் புரோமெலைன் என்ற என்சைம் நிறைந்துள்ளது.
இவை வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டதுடன், அழற்சி எதிர்ப்பு தன்மையும் கொண்டுள்ளது.
வைட்டமின்கள், தாது பொருட்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ள நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அன்னாசி பழத்தினை அடிக்கடி எடுத்துக்கொள்ளவும். மேலும் இதிலுள்ள சத்துக்கள் புற்றுநோய் அபாயத்தினை குறைக்கின்றது.
உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க முயற்சி செய்பவர்கள் அன்னாசியை எடுத்துக் கொண்டால் நல்ல மாற்றத்தினை பெற முடியும். மேலும் எலும்புகளை வலுவாக்கும் கால்சியம், மாங்கனீசு அதிகமாக உள்ளது.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி அன்னாசிபழத்தினை எடுத்துக் கொள்ளவும்.
அன்னாசி சாப்பிடுவதால் வயிற்றில் எரிச்சல் அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தினை அதிகரிக்கும்.
நீரிழிவு நோயாளிகள் அன்னாசி பழத்தினை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிபழத்தினை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்கவும்.

கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பே அன்னாசிபழத்தை எடுத்துக் கொள்ளவும்.
உதடு, நாக்கில் வீக்கம் ஏற்பட்டால் அன்னாசிபழத்தினை சாப்பிட வேண்டாம்.
யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசி பழத்தினை எடுத்துக்கொள்ளக்கூடுாது. ஏனெனில் இவை பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |