Chanakya thoughts: இறந்த பிறகு நரகத்திற்கு அனுப்பும் தவறுகள்- உங்களிடம் இருக்கா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய கூற்றுப்படி, மரணத்திற்குப் பிறகு ஒருவர் சொர்க்கத்திற்குச் செல்வதா அல்லது நரகத்திற்குச் செல்வதா என்பதனை அவர்கள் செய்யும் செயல்களே தீர்மானிக்கின்றன.
அந்த வகையில் வாழ்க்கையில் நாம் மறந்தும் கூட செய்யக் கூடாத தவறுகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நகரத்திற்கு அனுப்பும் தவறுகள்
1. சாணக்கியரின் கூற்றுப்படி, பாவம் அதிகம் செய்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். உதாரணமாக உறவினர்களை வெறுப்பவர்கள், பெரியவர்களை அவமதிப்பவர்,தீய குணம் கொண்டவர்கள், பிறரை சித்திரவதை செய்பவர்கள் மற்றும் கெட்டவர்கள் போன்றவர்கள் பாவிகளாக பார்க்கப்படுகிறார்கள். இது போன்ற பாவங்களை செய்பவர்கள் இறந்த பின்னர் நரகத்திற்கு தான் செல்வார்கள்.
2. சாணக்கிய நீதி படி, பெண்களை அவமரியாதை செய்பவர்கள், குழந்தைகளை தவறாக நடத்துபவர்கள், ஏழைகளை சுரண்டுபவர்கள் போன்றவர்கள் பெரும் பாவிகளாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் இறந்த பின்னர் நரகத்திற்கு தான் செல்வார்கள். கடவுள் கூட இந்த பாவங்களை மன்னிக்க மாட்டார்.
3. துன்மார்க்கன் எப்போதும் வார்த்தைகளாலும், கெட்ட செயல்களாலும் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மற்றவர்கள் வலியை கொடுப்பார்கள். இந்த பாவம் யாரும் செய்யக் கூடாது என சாணக்கியர் கூறுகிறார். பிரியமானவர்களை கஷ்டப்படுத்துவது மிகவும் கொடுமையான செயலாக பார்க்கப்படுகின்றது. அத்தகைய நபர் ஒருவர் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ மாட்டார்.
4. பேராசை கொண்ட ஒருவர் வாழும் போதே நரகத்திற்கு இடம் போடுகிறார்கள். பணம், சொத்து, மரியாதை அவர்களை சுயநலவாதிகளாக மாற்றும். அதற்காக தீங்கு செய்யும் நபராக மாறுவார்கள். இது நிச்சயம் நிம்மியான இறப்பை தராது. துர் ஆத்மாவாக இந்த உலகில் பல நாட்களுக்கு சுற்றித்திரிவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |