இந்த உணவுகளை இரண்டு முறைக்கு மேல் சூடுபடுத்தக்கூடாதாம். ஏன் தெரியுமா?
எந்தெந்த உணவுகளை இரண்டு முறைக்கு மேல் சூடுபடுத்தக்கூடாது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
உணவை சூடுபடுத்துதல்
பொதுவாக நம்மில் சிலர் உணவு வீணாகக் கூடாது என்பதற்காக பல நாட்கள் எஞ்சிய உணவுகள் பிரிட்ஜில் வைத்து சூடு செய்து சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால் மீண்டும் மீண்டும் சில உணவுகளை சூடு செய்து சாப்பிடுவதால், அது உங்கள் உணவை நச்சுத் தன்மையுடையதாக மாற்றலாம்.

மேலும் இது உடலுக்கு பல்வேறு தீங்கை விளைவிக்கின்றது. அந்தவகையில் இப்படி இரண்டு முறைக்கு சூடு செய்து சாப்பிடுடக்கூடாத உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
அரிசி சாதம்:
நாம் ஒரு பாத்திரம் நிறைய சாதத்தை அப்படியே வைத்தால் அதில் பாக்டீரியாக்கள் வர தொடங்கிவிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதிலும் Bacillus Cereus மிகவும் வேகமாக வளரும். இதானல் நாம் இதை நாம் இரண்டு அல்லது அதற்கு மேல் சூடுபடுத்தினால் நமக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்படும். அப்படி சூடு செய்ய வேண்டுமானால், நாம் சாதத்தை வடித்த அடுத்து இரண்டு மணி நேரத்தில் ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு சூடுபடுத்த வேண்டும்.

கீரை:
பச்சை இலை காய்கறிகளில் இயற்கையாக நைட்ரேட் இருக்கும். இதானல் இதை நாம் சூடுபடுத்தும் போது அதன் அளவு அதிகமாக மாறும். இதனால் நம் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகின்றன. இது ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு பிரச்சனைகளை தரும். இதனால் தான் புதிதான மற்றும் சுத்தமான பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

இறைச்சி
இறைச்சி வகைகளை சூடுபடுத்தினால் நம் உடலுக்கு பல தீய விளைவுகள் ஏற்படும். இறைச்சிகளில் இயற்கையாகவே புரதம் நிறைந்துள்ளது. இதனால் நாம் இதை சூடுபடுத்தும் போது புராணம் அமைப்பு ஏற்படுவதால் இது செரிமான பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். இதனால் நாம் வாங்கும் இறைச்சியை தேவைக்கு மட்டும் எடுத்துவிட்டு பின் அதை ஃப்ரிட்ஜில் வைத்து தேவைக்கு பயன்படுத்தினால் நல்லது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |