சாப்பிட்ட உடனே வயிறு உப்புசமா? இந்த உணவுகள் காரணமாக இருக்கலாம்
These Food Cause Stomach Bloating: வயிறு உப்புசம் மற்றும் வாயு தொல்லையை ஏற்படுத்தும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய சூழ்நிலையில் பலரும் வயிறு சம்பந்தமாக பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். அதாவது சாப்பிட்ட பின்பு வயிறு கனமாக இருப்பதாகவும், அசௌகரியத்தை கொடுப்பதாகவும் இருக்கின்றது.
இவ்வாறான பிரச்சனைக்கு முக்கியமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளும் காரணமாக இருக்கின்றது. அந்த வகையில் எந்தெந்த உணவுகள் இவ்வாறான தொந்தரவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கிட்னி பீன்ஸ்
புரதச்சத்து நிறைந்த கிட்னி பீன்ஸ் வாயுதொல்லையும் ஏற்படுத்துகின்றது. இவற்றில் ராஃபினோஸ் போன்ற நொதிக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகளும் ஏற்படுகின்றது.
இவை சிறுகுடலில் முழுமையாக செரிக்கப்படாமல், பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்களால் நொதிக்கப்படும் போது வாயு பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. இதனால் வயிறு உப்புசம், வாயு பிரச்சனை ஏற்படுகின்றது.

கொண்டைக்கடலை
அதிகமான கொண்டைக்கடலை சாப்பிடுவதால் வயிறு உப்புசம் ஏற்படுகின்றது. இவற்றில் புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து என பல ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், நொதிக்கக்கூடிய மாவுச்சத்துக்களும், நார்ச்சத்துக்களும் அதிகமாகவே இருக்கின்றது.
ஒரே நேரத்தில் அதிலும் இரவு உணவில் அதிகளவில் கொண்டைக்கடலை சாப்பிடுவதால் வாயு தொல்லை, வயிறு உப்புசம் பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

வெங்காயம்
சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் வெங்காயம் வயிறு உப்புசம் பிரச்சனையை அதிகரிக்கின்றது. அதாவது வெங்காயத்தில் ஃபிரக்டான்ஸ் எனப்படும் கார்போஹைட்ரேட் உள்ளது.
இவை முழுவதும் சிறுகுடலில் செரிக்கப்படாமல், இருப்பதால் குடலில் வாயு உருவாகி வயிறு உப்புசத்தை ஏற்படுத்துகின்றது.

பால்
அதிகமான சத்துக்களை கொண்டுள்ள பால் அருந்துவதால் வயிறு உப்புசம் ஏற்படுகின்றது. பாலில் லாக்டோஸ் எனப்படும் இயற்கையான சர்க்கரை உள்ளது.
இதனை ஜீரணிக்க உடலுக்கு லாக்டேஸ் என்ற நொதி தேவைப்படுகின்றது. இந்த நொதியின் பற்றாக்குறை ஏற்படும் போது, லாக்டோஸ் முழுமையாக ஜீரணிக்கப்படுவதில்லை. இதனால் வாயு மற்றும் வயிறு உப்புசம் பிரச்சனை ஏற்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |