இரும்பு கடாயில் எந்த உணவுகளை சமைக்கக்கூடாது தெரியுமா?
இரும்பு பாத்திரங்களில் என்னென்ன பொருட்களை சமைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் நான்ஸ்டிக் பாத்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதினால் புற்றுநோய் அபாயம் ஏற்படுவதுடன், உடலுக்கு பல தீமைகளையும் கொடுக்கின்றது.
ஆதலால் தற்போது மக்கள் ஆரோக்கியமாக வாழ விரும்புவதுடன், அதற்காக பாத்திரங்களையும் மாற்றி வருகின்றார்.
சமையலுக்கு சிறந்த பாத்திரம் என்றால், மண் பாத்திரம், இரும்பு பாத்திரம், சில்வர் பாத்திரம் மட்டுமே. இதில் சமைத்து சாப்பிடுவதால் உடம்பிற்கு சில சத்துக்களும் கிடைக்கின்றது.
குறிப்பாக இரும்பு பாத்திரத்தில் சமைத்தால் ஹீமோகுளோபின் அதிகரிப்பதுடன், இரும்புசத்து குறைபாடும் சரியாகின்றது. ஆனால் இரும்பு கடாயில் சில உணவுகளை சமைக்கக்கூடாது என்று கூறப்படுகின்றது.
அவை என்னென்ன உணவுகள் என்பதையும், காரணத்தையும் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
இரும்பு கடாயில் சமைக்கக்கூடாத உணவுகள்
இருமபு கடாயில் முட்டையை சமைக்கக்கூடாது. ஏனெனில் முட்டை அதில் ஒட்டிக்கொண்டு எடுப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துமாம்.
அமில தன்மைக் கொண்ட தக்காளியை அதிகமாக இரும்பு கடாயில் போட்டு சமைக்கக்கூடாது. இவை சுவை மாறுவதுடன், சில உடல் பிரச்சனையையும் ஏற்படுத்துமாம்.
இதே போன்று பன்னீர் போன்ற பால் பொருட்களை இரும்பு கடாயில் சமைத்தால் அது உடைந்து போவதுடன், சுவையும் மாறிவிடுமாம். இரும்பு கடாயில் சமைத்த பால் பொருட்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு என்றும் கூறப்படுகின்றது.
கடல் உணவான மீனையும் இரும்பு கடாயில் சமைக்கக்கூடாதாம். ஏனெனில் மீன் மென்மையானது என்பதால் இரும்பு கடாயில் சமைத்தால் உடைந்து போய்விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |