இந்த உணவுகளை மீண்டும் சூடு செய்து சாப்பிடாதீங்க... உயிருக்கே உலை வைக்குமாம்
சமைத்த உணவுகளை மீண்டும் சுடுபடுத்தி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனையைக் குறித்தும், எந்தெந்த உணவுகளை அவ்வாறு சாப்பிடக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் சில உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருந்து வருகின்றது.
ப்ரிட்ஜில் அதிகமான உணவுகளை சேமித்து வைத்து அதனை அவ்வப்போது சூடுசெய்து சாப்பிடுகின்றனர். இவை சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதாக பலரும் நினைக்கின்றனர்.
இவ்வாறு மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால், உணவு நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிடுகின்றது. சில உணவுகள் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவை என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

என்னென்ன உணவுகள்?
சிக்கன் போன்ற அதிக புரோட்டீன் உள்ள உணவுகளை மீண்டும் சூடுபடுத்தும் போது அதிலுள்ள புரோட்டீன் சிதைந்துவிடுவதுடன், சால்மோனெல்லா தொற்றும் ஏற்படும் அபாயமும் அதிகரிக்குமாம்.

காளானையும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்கவும். இவையும் புரோட்டீன் இழப்பு ஏற்படுவதுடன், செரிமான பிரச்சனையையும் ஏற்படுத்தும்.
மீந்துபோன சாதத்தினை திரும்ப திரும்ப சூடுபடுத்தினால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிவதுடன், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் பிரச்சனையும் ஏற்படும்.

உருளைக்கிழங்கையும் மீண்டும் சுடுசெய்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இதில் போட்யூலிசம் கிருமிகள் உருவாகும் நிலையில், இந்த கிருமிகள் மீண்டும் வளரக்கூடுமாம்.
ஒருமுறை சமைத்த சமையல் எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தினால், புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் உருவாகுமாம். மேலும் அதிக கொலஸ்ட்ராலுக்கும் இவை வழிவகுத்து மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துமாம்.

அதே போன்று ஒருமுறை போட்ட டீ-யை ஆற வைத்து திரும்ப திரும்ப சூடுபடுத்தக்கூடாது. அவ்வாறு செய்வதால் அசிடிட்டி பிரச்சனை அதிகரிக்குமாம்.
இதே போன்று கீரை வகைகளையும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்கவும். இதிலுள்ள நைட்ரேட்டுகள், புற்றுநோயை உண்டாக்கும் நைட்ரைட்டுகளாக மாறுவதால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்.

அவித்த அல்லது பொரித்த முட்டைகளை மீண்டும் சூடுபடுத்துவது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக மைக்ரோவேவில் வைத்தால், முட்டைகள் வெடிக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |