மூட்டுவலி பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்காதீங்க
முழங்கால் வலியை தடுப்பதற்கு சில உணவுகளை நாம் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முழங்கால் வலி
முழங்கால் வலி என்பது இன்று பெரும்பாலான நபர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக பல இடங்களுக்கு சென்று வைத்தியம் பார்க்கவும் செய்கின்றனர்.
குறுத்தெலும்பு தேய்மானம், உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பது, தசைநார் காயங்கள், அதிக எடை இவை மூட்டு வலிக்கு முக்கியமான காரணமாக இருக்கின்றது.
நமக்கு ஏதேனும் காயம் அல்லது தொற்று ஏற்படும் போது நோய் எதிர்ப்பு அமைப்பு அவற்றினை குணப்படுத்துகின்றது. இந்த செயல்பாட்டின் போது, உருவாக்கும் வீக்கம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள் திசுக்களை சேதப்படுத்துகின்றது. இதன் காரணமாகவும் மூட்டு வலி ஏற்படும்.
நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளினால் கூட முட்டுவலி பிரச்சனை ஏற்படுகின்றது. அவை என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

இறைச்சி
சிவப்பு இறைச்சி அதிகமாக சாப்பிடுபவர்கள் மூட்டு வலி பிரச்சனை வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த இறைச்சியில் அழற்சி சேர்மங்கள் அதிகமாக உள்ளதுடன், டிரான்ஸ் கொழுப்பு அல்லது நைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்களும் இருக்கும்.
இவை முழங்கால் வலியை ஏற்படுத்துகின்றது. மேலும் இந்த இறைச்சியில் இருக்கும் அதிகமான பியூரின்கள் யூரிக் அமிலம் உருவாகின்றது.
மூட்டுகளுக்குள் சென்று வீக்கம் மற்றும் முழங்கால் வலியை ஏற்படுத்தும் என்பதால் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவினை எடுத்துக் கொள்வது நல்லது.

சர்க்கரை உணவுகள்
தேநீர், காபி, இனிப்பு, செயற்கை சர்க்கரைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாகும். இவை ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், நோயெதிர்ப்பு செல்களைத் தூண்டி அழற்சி செல்களை வெளியிடுகின்றது. இவை முக்கியமான திசுக்கள் மற்றும் மூட்டுகளை சேதப்படுத்துகின்றது.
துரித உணவு, பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டி, டிரான்ஸ் கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு இவற்றினை தவிர்க்கவும். இவை முழங்கால் வலியை ஏற்படுத்தும்.
மது
மது அருந்துதல் முழங்கால் வலிக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயல்திறனை பாதிக்கலாம். இது மூட்டுவலி அறிகுறிகளை மோசமாக்கி, மூட்டுவலி, கீல்வாதம் மற்றும் பிரச்சனையின் தீவிரத்தை அதிகரிக்கும். மூட்டுகளுக்கு இடையே உள்ள 'சைனோவியல் திரவத்தின்' சரியான செயல்பாட்டை பராமரிக்க உடலுக்கு போதுமான தண்ணீர் தேவைப்படுகிறது. மது உடலை நீரிழப்பு செய்கிறது, இது மூட்டுகளில் மெத்தையைக் குறைத்து வலியை ஏற்படுத்துகிறது.
ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள்
நமது உடலுக்கு ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் தேவை, ஆனால் அவற்றில் அதிகமானவை முழங்கால்கள் மற்றும் மூட்டுகளுக்கு தீங்கு விளைவிக்கும். ஒமேகா-6 உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் ரசாயனங்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது வேர்க்கடலை எண்ணெய், தாவர எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோளத்தில் காணப்படுகிறது. ஒமேகா-6 ஐ அதிகமாக உட்கொள்வது உடலில் 'அராச்சிடோனிக் அமிலம்' உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் புரோஸ்டாக்லாண்டின்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இது கீல்வாதம் மற்றும் மூட்டு வலிக்கு வழிவகுக்கும்.
உப்பு
உப்பு உடம்பில் செல்களின் தண்ணீரை தக்க வைக்க காரணமாக இருப்பதால், முழங்கால் வலி மற்றும் மற்றுமு் மூட்டு வீக்கம் ஏற்படுகின்றது.
மோானோசோடியம் குளிட்டமேட் செயல்படுகின்றது. இவை நாள்பட்ட மூட்டு வீக்கத்தை ஏற்படுத்துவதுடன், முழங்கால் வலியையும் அதிகரிக்கின்றது.
சூப், பிட்சா போன்ற துரித உணவினை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவையும் முழங்காலில் வலி தொந்தரவு ஏற்படுகின்றது. ஆதலால் சோடியம் அதிகம் கலந்து உணவினை முற்றிலும் தவிர்க்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |