நம்பிக்கை துரோகத்தினை சந்திக்கும் நபர்கள் இவர்கள் தானாம்... உங்க பிறந்த தேதியும் இருக்குதா?
எண் கணிதத்தின்படி எந்த தேதியில் பிறந்தவர்கள் தங்களது வாழ்க்கையில் அதிக நம்பிக்கை துரோகத்தினை சந்திப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
எண் கணிதம்
எண் கணிதத்தின்படி ஒருவர் பிறந்த தேதியினைக் கொண்டு அவர்களின் சுபாவம், மென்மையான குணநலன்கள், நம்பகத்தன்மை, இறக்க குணம் என அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறான குணங்கள் நல்லது என்று நாம் நினைத்தாலும் இதனாலேயே நம்பிக்கை துரோகத்தினை சந்திப்பார்கள். அந்த வகையில் எந்தெந்த தேதியில் பிறந்தவர்கள் நம்பிக்கை துரோகத்தினை சந்திப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேதிகள்: 2, 11, 20, 29 (கூட்டு எண் 2)
இந்த தேதியில் பிறந்தவர்கள் மனதின் காரணரான சந்திர பகவானால் ஆளப்படுவார்கள். இயல்பிலேயே மென்மையான குணம், உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மையை கொண்டதுடன், மற்றவர்களை எளிதில் நம்பவும் செய்வார்கள்.
யாரேனும் கஷ்டம் என்று வந்து நின்றால் சற்றும் யோசிக்காமல் உதவி செய்யும் இளகிய மனம் படைத்தவர்கள். இதனையே மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இவர்களை ஏமாற்றவும் செய்வார்கள்.
தேதிகள்: 7, 16, 25 (கூட்டு எண் 7)
இந்த தேதியில் பிறந்தவர்கள் கேது பகவானால் ஆளப்படுவதுடன், ஆன்மீக சிந்தனை, தனிமை மற்றும் ஆழமான சிந்தனை கொண்டவராக இருப்பார்கள்.
தங்களது சொந்த உலகத்திலேயே இருப்பதால், சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தினை தெரிந்து கொள்வதற்கு தவறிவிடுவார்கள். அதிலும் கூட்டு தொழில், நெருங்கிய நண்பர்கள் அதிகமான ஏமாற்றத்தினை சந்திப்பார்கள்.
தேதிகள்: 8, 17, 26 (கூட்டு எண் 8)
சனி பகவானின் ஆட்சி செய்யும் இந்த தேதியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள்.
சனி பகவானின் ஆதிக்கம் இருந்தாலும், வாழ்க்கை எளிதாக அமைவதில்லை. பலமுறை போராட்டத்திற்கு பின்பே இவர்களின் முன்னேற்றம் இருக்கும்.
இவர்களின் நேர்மையை புரிந்து கொள்ளாமல், உதவி பெற்றவர்கள் பின்னாளில் இவர்களுக்கு எதிராக திரும்புவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |