வாழ்நாள் முழுவதும் மாரடைப்பு வரக்கூடாதா? இந்த எண்ணெய்யை மட்டும் பயன்படுத்துங்க
மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சமையல் எண்ணெய்யைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கொலஸ்ட்ரால்
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்களிடையே அதிகமான கொலஸ்ட்ரால், இரத்த அழுத்த பிரச்சனைகள் காணப்படுகின்றது.
இவற்றினை நாம் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவில்லை என்றால் அது இதய நோய் அபாயத்தை அதிகரித்து உயிருக்கு பிரச்சனையாக முடிந்துவிடும்.
நமது உடம்பில் இயற்கையாகவே உடம்பிற்கு தேவையான கொழுப்புகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், நாம் சாப்பிடும் உணவுகளிலும் கொலஸ்ட்ரால் இருக்கின்றது.
இதனால் கொழுப்பு அதிகரித்து பிரச்சனையில் முடிகின்றது. குறிப்பாக எண்ணெய்யில் பொரித்த உணவுகளை எடுத்துக் கொண்டால் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யைக் பொறுத்தும், கொலஸ்ட்ரால் பிரச்சனை எழுகின்றது. அப்படியெனில் நாம் சமையலுக்கு எந்த மாதிரியான எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்யில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிரம்பியுள்ளது, இது எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கின்றது.
மேலும் உடம்பில் எச்டிஎல் எனும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட இந்த எண்ணெய் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
அவகேடோ எண்ணெய்
அவகோடோ எண்ணெயானது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பான எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்குமாம். முக்கியமாக இந்த எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக உள்ள நிலையில், இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.
கனோலா எண்ணெய்
கனோலா எண்ணெய் உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய அபாயத்தை தடுப்பதற்கு உதவுகின்றது. இதில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக இருந்தாலும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இது வீக்கத்தை எதிர்ப்பு போராடுவதற்கும், கொழுப்பின் அளவை மேம்படுத்தவும் உதவுகின்றது.
வால்நட் எண்ணெய்
வால்நட் எண்ணெய்யும் கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன், நிறைவுறா கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகமாக இருக்கின்றது. கலோரிகள் அதிகமாக இருக்கும் இந்த எண்ணெய்யினை அளவாக உணவில் சேர்க்க வேண்டும்.
ஆளிவிதை எண்ணெய்
ஆளி விதை எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வளமாக அளவில் நிறைந்துள்ளன. எனவே இந்த எண்ணெயை உணவில் சேர்த்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகின்றது. சமைத்து முடித்த பின்பு சுவைக்காக சேர்ப்பதற்கு ஏற்றதாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |