2023 இல் அள்ளி கொடுக்க போகும் சனி...பிறக்கும் புத்தாண்டில் திருமண யோகம் யார் யாருக்கு காத்திருக்கிறது தெரியுமா?
பிறக்கும் புதிய ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்களை வாரிவழங்கக்கூடியதாக உள்ளது.
2023ம் ஆண்டில் சிலரின் வாழ்க்கை அப்படியே நல்ல வகையில் மாற்றம் காணக்கூடியதாக இருக்கும்.
இருப்பினும் 12 ராசிகளில் சில ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் கூடி வரப்போகின்றது.
இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2023ல் திருமண அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
துலாம்
துலாம் ராசிக்கு 2023ம் ஆண்டு சனிப் பெயர்ச்சியின் காரணமாக அர்த்தாஷ்டமச் சனி விலகி உங்களின் இல்லற வாழ்க்கையில் சிறப்பாக அமையும் அதிர்ஷ்டம் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலை ஆதாயம் பெற்று வெற்றி அடைவீர்கள்.
விருச்சிகம்
2023 ஆம் ஆண்டு சனிப் பெயர்ச்சியின் காரணமாக வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் முன்னேற்றங்களை அனுபவிப்பீர்கள். அதிர்ஷ்டமான துணை அமைய வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்
உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் 2023 இல் அதிர்ஷ்டம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் அதிக அளவு வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் வசப்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு 2023 ஆம் ஆண்டில் புதிய தொடக்கத்தைப் பெறக்கூடிய ஆண்டாக இருக்கும். திருமண முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், வீடு,மனை வாங்க முயல்பவர்களுக்கு சாதகமான ஆண்டாக இருக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் வெற்றியை உறுதி செய்யும்.
மிதுனம்
நல்ல ஏற்றம் கிடைக்கக்கூடிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு இருக்கும்.
அதிர்ஷ்டமான ஆண்டாகவும், காதல் கைகூடவும் வாய்ப்புள்ளது. காதல் திருமணத்தில் முடியவும் வாய்ப்புகள் உள்ளது.