Chicken Pox: கொளுத்தும் வெயில்! அம்மை நோய் வராமல் தடுக்கும் உணவுகள்
கோடை காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரித்து விடுகின்றது. இதனால் மக்கள் கடும் அவதியில் சிக்கிக் கொள்கின்றனர்.
தற்போது வெயில் என்பது அளவுக்கு அதிகமான இருந்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் கோடை வெப்பத்தின் போது சில நோய்களும் நம்மை தாக்குகின்றது. அதில் ஒன்று தான் அம்மை நோய். காற்றில் இருந்து பரவும் இந்நோய் சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரையும் எளிதில் பாதிக்கும்.
அதிலும் சிக்கன்குனியா நோய் தாக்கியவர்களுக்கு இந்த அம்மை நோய் எளிதில் தாக்குவதாக கூறப்படும் நிலையில், இது வெரிசெல்லா என்ற வைரஸ் தாக்கத்தினால் ஏற்படுகின்றது.
அம்மை வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
காற்றில் பரவும் இந்நோய்களை தடுக்கவும், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் முருங்கை பூ பயன்படுகின்றது.
கிருமி நாசினியாக செயல்படும் வேப்பிலையை குளிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து குளித்தால் வெரிசெல்லா வைரஸை எதிர்த்து போராடுமாம்.
உம்பில் நச்சுக்களை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தயிரில் உள்ள புரோபயாடிக் உள்ளடக்கம் நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் நிறைந்த முட்டைக்கோஸ் எடுத்துக்கொண்டாலும் இந்நோயிலிருந்து தப்பிக்கலாம்.
கேரட்டில் பீட்டா கரோட்டின் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும் நிலையில், எந்தவொரு தொற்றையும் எதிர்த்து போராடுகின்றது.
கோடை காலத்தில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் இளநீர் சிறந்த பானமாகும். உஷ்ணத்தை குறைக்கும் இந்த பானம் அம்மை வராமல் தடுக்கவும் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |