Online order: பிரியாணியில் புழு! திமிராக பதிலளித்த ஸ்விகி ஊழியர்
ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணியில் புழுக்கள் இருப்பதாக ஹைதராபாத் நபர் கூறிய பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஹைதராபாத்தில் ஸ்விக்கியில் ஆர்டர் செய்த தனது சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததாக சாய் தேஜா என்பவர் புகார் செய்துள்ளார்.
சாய் தேஜா என்ற சமூக ஊடகப் பயனர் பெயரைக் கொண்ட ஹைதராபாத் நபர், நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்த பிரியாணியின் சிக்கன் துண்டுகளில் புழுக்கள் இருப்பதாகக் கூறி, சமீபத்தில் சமூக ஊடகங்களில் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்வில் ஸ்விகி ஊழியர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு அறிவித்தும், அவர்களின் பதிலில் அதிருப்தி அடைந்த அவர், குகட்பல்லியில் உள்ள பிரியாணி கடையில் ஆர்டர் செய்வதைத் தவிர்க்குமாறு பிறருக்கு அறிவுறுத்தி, சமூக வலைதளங்களில் ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டார்.
அவர் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் (FSSAI) இணையதளத்தில் புகார் செய்ய முயன்றுள்ளார். ஆனால் தேவையான அனைத்து விவரங்களையும் அவர் அளித்த போதிலும் கணினி கூடுதல் தகவல்களைக் கோருவதால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்.
Mehfil biryani, Kukatpally
— Sai Teja (@Karlmarx__07) June 23, 2024
Bugs in chicken pieces @cfs_telangana
This is the response from @Swiggy (Refund of 64rs for a bill of 318rs : Order id - 178009783111586)
Please stop ordering from Mehfil kukatpally pic.twitter.com/o8UBaTCzk2
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |