உலகத்தில் ஆண்களே இல்லாத தீவு எங்கு உள்ளது தெரியுமா?
உலகத்தில் பெண்கள் மட்டும் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே தீவு இருப்பது உங்களில் யாருக்கு தெரியும்.
பெண்கள் மட்டும் உள்ள தீவு
பின்லாந்தின் பால்டிக் கடலில் அமைந்துள்ள சூப்பர்ஷீ (SuperShe) தீவு, உலகில் ஆண்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லாத, பெண்களுக்கு மட்டுமே திறந்த ஒரு தனிப்பட்ட சுற்றுலா தலமாக அமைந்துள்ளது.
ஹெல்சிங்கிக்கு அருகிலும், ராசெபோரியின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள இந்த தீவு, சுமார் 8.4 ஏக்கர் பரப்பளவில் இயற்கை சூழலை மாற்றமே இல்லாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.

பாறைகள் நிறைந்த கடற்கரைகள், அடர்ந்த காடுகள், அமைதியான பால்டிக் கடல் நீர் மற்றும் திறந்த வானம் போன்றவை இதற்கு தனித்துவமான அழகையும் அமைதியையும் கொடுக்கின்றது.
ஆண்கள் அனுமதி இல்லை என்ற இந்த கட்டுபாட்டின் காரணமாக பெண்கள் எந்தவிதமான கவலையோ, பயமோ இல்லாமல், பாதுகாப்பாகவும் மன அமைதியுடனும் ஓய்வெடுக்க முடியும் என்பதற்காகவும், தனிப்பட்ட அனுபவங்களை அனுமதிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தீவிற்கு ஒரே நேரத்தில் எட்டு பெண்கள் மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படுகின்றனர். யோகா, தியானம், நடைப்பயணம், கயாக்கிங், பாரம்பரிய ஃபின்னிஷ் சானா சடங்குகள் போன்ற நல்வாழ்வு செயல்பாடுகள் தினசரி அனுபவங்களாக உள்ளன.

கட்டாய அட்டவணைகள் எதுவும் இல்லாமல், பெண்கள் தங்களின் உடல் மற்றும் மன தேவைகளுக்கேற்ப நாளை அவர்களுக்கு பிடித்தது போல மாற்றலாம். இந்த தீவை முன்னாள் தொழில்நுட்ப நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தொழில் முனைவோர் கிறிஸ்டினா ரோத் நிறுவியுள்ளார்.
இவர் பெண்கள் சமூக எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டு, தங்களுடன் தாங்களே மீண்டும் இணையக்கூடிய இடத்தை உருவாக்க விரும்பினார்.
இதன் காரணமாக, தீவு குறைந்தபட்ச வடிவமைப்புடன், இயற்கையை அனுபவிக்கத் தகுந்த வசதிகள் மட்டுமே கொண்டுள்ளது. தீவில் விற்கப்படும் உணவுகள் பருவகாலத்தில் கிடைக்கும் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.

புதிய கடல் உணவுகள், தாவர அடிப்படையிலான உணவுகள் மற்றும் மூலிகை டீக்கள் மூலம் ஆரோக்கியமும் சுவையும் கலந்தவையாக இவை இருந்தது.
சூப்பர்ஷீ தீவு, மன அமைதி, தனியுரிமை, இயற்கை இணைவு மற்றும் முழுமையான ஓய்வு ஆகியவற்றை வழங்கும் இடமாக, பெண்கள் தங்களைத் தாங்களே கண்டுபிடிக்க மற்றும் மன, உடல் நலத்தை மேம்படுத்த ஒரு தனிப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |