இன்றும் குதிரை வண்டி தானாம்... உலகின் வாகனங்கள் அற்ற ஒரே தீவு - காரணம் என்ன?
உலகில் மெகினாக் தீவில் (Mackinac Island) மோட்டார் வண்டிகள் மற்றம் எந்த வாகனங்கள் ஓடுவதற்கம் அனுமதி இல்லாமல் தற்போது வரை குதிரை வண்டி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
உலகில் வாகன பயன்பாடு அற்ற தீவு
மிச்சிகன் மாநிலம் என்றாலே பெரும்பாலோர் அறிந்தது வாகனத் தொழில் தான். டெட்ராய்ட் நகரம் கார் தொழிலின் தாயகமாக இருந்தாலும், அதே மாநிலத்தில் கார்கள் இல்லாமல் இயற்கையுடன் இணைந்து வாழும் ஒரு தீவும் இருக்கிறது.
ஹுரான் ஏரியின் நடுவே அமைந்துள்ள மெகினாக் தீவு, நவீன இயந்திர உலகத்திலிருந்து விடுபட்டு பழங்கால அமைதியையும் எளிய வாழ்க்கை முறையையும் இன்றும் பின்பற்றி வருகின்றது.

வாகன தடைக்கு காரணம்
இந்த தீவு 3.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தத் தீவில் சுமார் 600 பேர் மட்டுமே நிரந்தரமாக வசிக்கின்றனர். அதிலும் முக்கியமாக மனிதர்களுக்கு இணையாக குதிரைகளும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
இங்குள்ள குதிரைகள் மக்கள் எண்ணிக்கையை ஒத்திருக்கின்றன.
இந்த தீவில் மோட்டார் வாகனங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த விதிமுறை 1898ஆம் ஆண்டு தொடங்கி உள்ளது. அந்த ஆண்டில் தீவிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு கார், அதன் இன்ஜின் சத்தத்தால் குதிரைகளை பயந்துள்ளது .
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக வாகனங்கள் தடை செய்யப்பட்டது. இது ஆரம்பத்தில் தற்காலிய நடைமுறையாக இருந்தும் தற்போது இது இந்த தீவின் அடையாளமாக உள்ளது.

குதிரை மக்கியதுவம் - தற்போது குப்பை சேகரிப்பு, சரக்கு போக்குவரத்து, மற்றும் சுற்றுலா பயணிகள் இயக்கம் அனைத்தும் குதிரை வண்டிகளால் மட்டுமே நடைபெறுகின்றன.
சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லவோ அல்லது மிதிவண்டியில் பயணிக்கவோ மட்டுமே அங்கே அனுமதி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |