73 வயதில் ரஜினி சொன்ன சீக்ரெட்டால் 26 கிலோ குறைத்த நடிகர் ராதா ரவி! எப்படி?
தற்போது 73 வயதாகும் நடிகர் ராதா ரவி, நடிகர் ரஜினி சொன்ன ஒரு சீக்ரெட்டால் சுமார் 26 கிலோ வரை குறைத்திருக்கிறார்.

ராதா ரவி
தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான ராதாரவி, தற்போது 73 வயதிலும் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.

எடை அதிகரிப்பால் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்த அவர், சமீபகாலமாக உடல் எடையைக் குறைப்பதில் கவனம் செலுத்தினார்.
இதன் பலனாக, உடல் எடையை கணிசமாகக் குறைத்து, சர்க்கரை நோயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனது உடல்நல மாற்றம் குறித்து அவர் பகிர்ந்த தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ரஜினி சொன்ன சீக்ரெட்
ராதா ரவி தன்னுடைய வயதான காலத்திலும் உடல் நலத்தில் கவனம் செலுதி வருகிறார். 110 கிலோவில் இருந்த அவர் சுமார் 26 கிலோ வரை குறைத்திருக்கிறார். இது தொடர்பான சீக்ரெட்டும் அவர் கூறி உள்ளார்.
ராதா ரவி கூறும் போது “நான் சாப்பிடும் உணவில் சாதத்தின் அளவை வெகுவாக குறைத்துவிட்டேன். அதற்கு ரஜினி சார்தான் காரணம். நாங்க லிங்கா படம் பண்ணும்போது அவர் ‘அரிசியை அறவே நிறுத்தணும், வெள்ளையா இருக்கிறத சாப்பிடக்கூடாது.
உப்பு, சர்க்கரை, பால், வெண்ணைகூட சாப்பிடாதீங்க’ என்பார். நேரடியான என்னிடம் அவர் இதை சொல்லவில்லை. என்றாலும்கூட, அதை அடிக்கடி அவர் சொல்லிக் கேட்டதால், மனதில் பதிந்துவிட்டது.
அப்போதிருந்தே என்னையறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக டீ, காஃபி விட்டுட்டேன். இப்பவும் ப்ளாக் காஃபிதான் குடிக்கிறேன். நாள்பட்ட இந்தப் பழக்கம்தான் என் உடல் எடையை குறைத்தது.

வெள்ளைப் பொருட்களை விட ஆரம்பித்த பின்னர், என்னால் என் உடலில் நிகழ்ந்த மாற்றங்களை உணர முடிந்தது. எப்போதுமே எடை குறையும் போது நிதானமாகவும் பொறுமையாகவும் எடை குறைய வேண்டும். வேகமாக குறைந்தால் ஆபத்து என பொருள்
நான் அசைவ பிரியன். ஆனால் அதன் அளவில் கவனமாக இருப்பேன். கொஞ்சம் சுவை அதிகம் தூண்டப்பட்டு அதில் விழுந்துவிட்டாலும், அவ்வளவுதான்... க்ளோஸ். எனவே அளவில் கவனமாக இருப்பேன்
இதுபோன்ற தன் வாழ்வியல் மாற்றங்களால், சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக கூறும் நடிகர் ராதாரவி,
“இப்போதெல்லாம் நான் இன்சுலின் எடுப்பதே இல்லை. இது என் உடலில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றம்” என்று நெகிழ்ந்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |