சமையலை ருசியாக்கும் மண், சேறு! இந்த தீவின் ரகசியம் என்ன தெரியுமா?
ஈரானை சேர்ந்த தீவொன்றில் சமையலை ருசியாக்க மண், சேறை சேர்க்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
சமையல் என்றாலே ருசி தான், காரசாரமாக மசாலாக்களை கலந்து தயாராகும் உணவுக்கு அடிமையானவர்கள் ஏராளம்.
இனிப்பு, கார்ப்பு, உவர்ப்பு என ஒவ்வொரு நபருக்குமான ருசி வேறுபடும், ஆனால் ஈரானை சேர்ந்த தீவொன்றில் மக்கள் மண் மற்றும் சேறை சமைத்து வருகிறார்கள்.
ஈரானின் Hormuz என்ற தீவில் வசிக்கும் மக்களே, இவ்வாறு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர், உண்ணக்கூடிய மண் மிகவும் கலர்புல்லாக குட்டி குட்டி மலைகளாக காட்சியளிக்கிறது.
ப்ரெஷ்ஷாக பிடிக்கப்பட்ட மீன்களை சுத்தம் செய்து, ஆரஞ்ச் நிற மண்ணை தடவி, இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்தி விடுகின்றனர்.
பின்னர் இதைக்கொண்டு செய்யப்படும் உணவு பதார்த்தமானது மிகவும் ருசியாக இருக்குமாம், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதை விரும்பி சாப்பிடுவதாகவும் தெரிவிக்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
அதிலும் குறிப்பாக இந்த மண்ணில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.