ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளை கர்ப்பமாக்கிய யூடியூபர்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
ஒரே நேரத்தில் தன்னுடைய இரண்டு மனைவிகளையும் கர்ப்பமாக்கிய கணவனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபலமான Youtuber
ஹைதரபாத்தை சேர்ந்த அர்மான் மாலிக் என்ற இளைஞரொருவர் Youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் லைப் ஸ்டைல் பற்றிய விஷயங்களை தினந்தோறும் அப்டேட் செய்வார்.
இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அர்மான் கடந்த 2011-ஆம் ஆண்டு பாயல் மாலிக் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களுக்கு சிராயு மாலிக் என்கிற மகன் என்ற மகனும் இருக்கிறார்.
இரண்டு திருமணம்
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாயல் மாலிக்கின் தோழியான கிருத்திகா என்பவரையும் காதலித்து இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
தன்னுடைய இரண்டு மனைவிகளுடன் ஒரே விட்டில் வசித்துக் கொண்டிருக்கும் அர்மான் சமிப தினங்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் தன்னுடைய இரண்டு மனைவிகளும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். மேலும் இவர்களுடன் போட்டோ ஷீட் ஒன்றை நடத்திய அழகிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒன்றுக்கே வழியில்லை. இவருடன் இரண்டு மனைவிகளுடன் சந்தோசமாக இருக்கிறார் என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.