யாழ்ப்பாணத்தில் இளைஞர் செய்த செயலால்... பட்டத்துடன் பறந்து சென்ற நபர்! வைரலாகும் பரபரப்பு வீடியோ;
பட்டத்துடன் பறந்த நபர் ஒருவர் 40 அடி தூரம் பறந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் மந்திகை பகுதியில், இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு இளைஞர்கள் சில ஒன்றுக்கூடி அந்த பகுதியில் பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட்டுள்ளனர்.
அதன் பின்னர் அந்த பட்டத்துடன் இன்னொரு பட்டத்தை சேர்த்து பறக்கவிட்ட முற்பட்டுள்ளனர். அப்போது இரண்டாவது பட்டத்தின் கயிற்றையும், முதல் பட்டத்தின் கயிற்றையும் பிடித்தவாறு இளைஞர் ஒருவர் பறக்க ஆரம்பித்துள்ளார்.
சுமார் 40 அடி தூரம் வரை பறந்த அவரை இளைஞர்கள் கீழிறக்க முடியாமல் திணறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, சுமார், 5 நிமிடங்கள் பறந்த நபர் சுமார் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கையை விட கீழே விழுந்தார்.
இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவ ஆரம்பித்து இருக்கிறது.