உலகின் மிகவும் ஆடம்பரமான பழம் - ஒரு பழத்தின் விலை இத்தனை ஆயிரமா?
உலகிலேயே மிகவும் ஆடம்பரமான பழம் மற்றும் அது உங்கு விளைகிறது அதன் விலை என்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
உலகின் ஆடம்பரமான பழம்
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பழம் மிகவும் பிரபலமாக இருக்கும். உலகில ஜப்பான் நாட்டு உற்பத்திகள் மிகவும் பிரபல்யமானவை. அந்த வகையில் ஜப்பான் ஆடம்பரமான பழங்களுக்காகவும் பிரபலமாகி இருக்கிறது.
இதற்கு காரணம் அந்த பழங்களின் தரமும் அவற்றின் வேறுபட்ட சத்தும் தான். இந்த நாட்டில் உயர்ந்த விலை கொண்ட ஸ்ட்ராபெர்ரிகள், சதுர வடிவ தர்பூசணிகள் போன்ற பழங்கள் விற்கப்படும்.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க ஹொக்கைடோ மாகாணத்தைச் சேர்ந்த யுபாரி கிங் முலாம்பழம் ஜப்பானின் மிகவும் ஆடம்பரமான பழமாக கருதப்படுகின்றது.
அதிக சாறு, நல்ல இனிப்பு, வெண்ணெய் போல கரையும் மென்மையான சதை என இவை அனைத்தும் ஒரே பழத்தில் கிடைப்பதால் இது மிகவும் பிரபலமான பழமாக இருக்கின்றது.
வட ஜப்பானின் இதமான கோடைக்காலத்தில், எரிமலையின் சாம்பல் கலந்த மண்ணில், விவசாயிகளின் கடுமையான கண்காணிப்பின் கீழ் இந்த பழம் வளர்க்கப்படுகின்றது.

யுபாரி கிங் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உயர்தர முலாம்பழ இனங்களை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு வகை முலாம்பழமாகும்.
ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் உள்ள யுபாரி நகரில் மட்டுமே இது பயிரிடப்படுகிறது.இந்த பழங்கள் ஒவ்வொன்றும் 1 முதல் 2.5 கிலோ வரை எடையுடனும், குறைபாடற்ற முட்டை வடிவத்திலும், சமச்சீரான வெளிப்புற அமைப்பிலும் இருக்கும்.
இந்த பழத்தின் மென்மையான அமைப்பு மனம் கவரும் நறுமணம் மற்றும் செழுமையான சுவை ஆகிய காரணங்களால், யுபாரி கிங் ஜப்பானின் பாரம்பரிய இனிப்பு வகைகளுக்கே போட்டியாகக் கருதப்படுகிறது.

யுபாரி கிங் முலாம்பழங்கள் யுபாரி நகரைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகின்றன.ஒரு பழத்திற்கு $300 (சுமார் ரூ.27,000) வரை விற்கப்படுகின்றன.
சற்று குறைந்த தரமுடையவைகூட $35-50 (ரூ.3,200-ரூ.4,500) விலையில் விற்கப்படுகின்றன. கியோடோ செய்திகளின்படி, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், ஒரு ஜோடி யுபாரி கிங் முலாம்பழங்கள் $45,000 (சுமார் ரூ.40 லட்சம்)வரை விற்கப்பட்டதாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |