தங்கத்தை விட விலையுயர்ந்த தேங்காய் - இதனால் என்ன பயன், ஏன் இவ்வளவு விலை?
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தேங்காய் பற்றிய விபரத்தை பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
விலை உயர்ந்த தேங்காய்
வழக்கமாக நாம் சமையல்களில் பயன்படுத்தும் தேங்காய் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் தற்போது உலகில் மிகவும் விலையுயர்ந்த தேங்காய் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தேங்காய் அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சுவைக்காக மக்கள் விரும்புகின்றனர். ஆனால் ஒரு தேங்காயை மில்லியன் கணக்கில் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் யாரால் தான் நம்ப முடியும்.
இது ஒரு அரியவகை தேங்காய் இதனை கோகோ டி மெர் அல்லது "இரட்டை தேங்காய்" என்று அழைக்கிறார்கள். இதன் சராசரி எடை 15 முதல் 20 கிலோ வரை இருக்குமாம்.

தேங்காயின் உருவாக்கம் - இந்தியப் பெருங்கடலில் உள்ள அழகிய சீஷெல்ஸ் தீவுகளில் வளரும் பனை மரத்தில் தான் இந்த சுமார் 15 முதல் 25 கிலோகிராம் எடையில் விளைகிறது.
இவற்றில் சிலவை 40 கிலோ கிராம் எடையை கொண்டிருக்கும். இதன் நீளம் 40 முதல் 50 சென்டி மீட்டர் மற்றும் அகலம் 18 முதல் 20 சென்டி மீட்டர் வரை இருக்கும். இந்த விதை அதன் வடிவம், நீளம் காரணமாக உலகளவில் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
 
இந்த தேங்காய் விதைகள் லோடோசியா மால்டிவிகா என்ற பனை மரத்தில் வளர்கிறது. இந்த மரம் மிக மெதுவாக வளரும். அதுவும் இதில் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பழம் காய்க்குமாம்.
அப்படி காய்க்கும் பழங்கள் பழுக்க 45 ஆண்டுகள் எடுக்குமாம். இந்த மரங்கள் 30 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளர்ந்து 800 ஆண்டுகள் வரை வாழும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதன் விலை எவ்வளவு?
தற்போது உலகின் விலை உளர்ந்ததாக இருக்கும் இந்த தேங்காயின் விலை ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரை உள்ளது. இது சீஷெல்ஸில் உள்ள சில தீவுகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது.
ஆனாலும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் இதுவும் உள்ளது. அதாவது தற்போது இது அழிந்து வரம் இனமாக இருக்கின்றது. தற்போது உலகில் 7000 முதல் 8000 கோகோ டி மெர் மரங்கள் மட்டுமே உள்ளன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        