நம்பிக்கை vs அறிவியல்... நிலவுக்கு கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கா?
பொதுவாகவே தொன்று தொட்டு அறிவியல் காரணம் சரியாக தெரியாமலேயே பின்பற்றப்பட்டு வரும் விடயங்களை மூட நம்பிக்கைகள் என்று குறிப்பிடுகின்றோம்.
அந்தவகையில் நிலவின் ஒளியானது முடி வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும் அல்லது கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கையா காணப்படுகின்றது.

அதாவது தேய்பிறை நாட்களில் முடி வெட்டுவதால், முடி வளர்ச்சி மெதுவாகும் என்றும் வளர்பிறையில் முடி வெட்டினால் கூந்தல் விரைவில் வளர்ச்சியடையும் என்ற ஒரு கருத்தியல் பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
இன்றளவும் இதை நம்பி பின்பற்றி வருபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது? அதில் ஏதும் அறிவியல் காரணங்கள் உள்ளதா? என்பது பற்றிய விரிவாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

நிலவின் ஒளி- கூந்தல் வளர்ச்சி
பொதுவாகவே நமது முன்னோர்கள் வளர்பிறை காலத்தில் முடி வெட்டினால், முடி விரைவாகவும் அடர்த்தியாகவும் வளரும் என நினைத்து குழந்தைகளுக்கு மொட்டை போடுவது மற்றும் கூந்தலை ட்ரிம் செய்வது என நிலவின் வளர்ச்சியுடன் கூந்தல் வளர்ச்சியை தொடர்புப்படுத்தி சில நடைமுறைகளை பின்பற்றி வந்தனர்.

அந்தவகையில், தேய்பிறையின் போது முடி வெட்டினால், முடி வளர்ச்சி மெதுவாகும் என்றும், பௌர்ணமி தினத்தில் முடி வெட்டினால், முடி வலிமையாகவும், அடர்த்தியாகவும் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
அதனால், இந்த காலகட்டத்தில் நுனி முடி வெட்டுவது, முடிக்கு ஊட்டமளிப்பது போன்றவற்றை செய்ய பௌர்ணமி தினம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும் அமாவாசை தினமானது முடி வெட்டுவதற்கு உகந்த நேரம் அல்ல என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இது ஒரு அறிவியல் ஆதாரமற்ற ஆனால் மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு கட்டுக்கதை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இதை நிரூபிக்க எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |