பறக்கும் பாம்புகள் பற்றி தெரியுமா? சுவாரஷ்ய தகவல் இதோ
பொதுவாக பாம்புகள் பறக்குமா என்பது சந்தேகமே. உலகில் பல்லாயிரக்கணக்கான பாம்புகள் இருக்கின்றது. இவை ஒவ்வொன்றிற்கும் பல திறமைகள் உள்ளன. இதில் பறக்கும் பாம்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகின்றாம்.
பறக்கும் பாம்புகள்
பறக்கும் பாம்புகள் என்று கூறும் போது நாம் தவறாக நினைப்பது அவை பறவைகள் போல பறக்கின்றன என்று ஆனால் இல்லை. இந்த பறக்கும் பாம்புகள் மரத்திலிருந்து மரத்திற்கு தாவி சறுக்கி செல்கின்றன.
இவை மற்றைய பாம்புகளை விட இவற்றிற்கு மரத்தில் ஏறும் திறமை உள்ளது. இந்த பாம்புகளுக்கு ஒரு மரத்திலிருந்து கீழே குதிக்கும் திறமை உள்ளது. இப்படி குதிக்கும் போது இவை இவற்றின் உடலை தட்டையாக மாற்றும்.
இதனால் 30 மீட்டர் வரை சறுக்கி பறக்க கூடியது. இந்த பாம்புகள் தென்கிழக்கு ஆசியா இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸை பூர்விகமாக கொண்டவை.
இவை கூடுதலாக வெப்பமண்டல காடுகளில் அதிகமாக வாழும். இவை காற்றில் பற்றக்க முன்னர் தன் உடலை J வடிவத்திற்கு வடிவமைத்து கொள்ளும்.
இவை இந்த பறக்கும் திறமையை தன்னை வேட்டையாடுபவர்களிடம் இருந்து தப்பிக்கவும் இரையை வேட்டையாடவும் பயன்படுத்துகிறது. இது ஊர்ந்து செல்வதை விட அதிக வேகத்தை கொடுக்கும்.
இந்த பாம்பு இனங்கள் சிறிய விஷத்தன்மை கொண்டவை. மேலும் இவை சிறிய பூச்சிகள் போன்றவற்றை இரையாக்கி கொள்ளும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |