விஜய்யின் The GOAT திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு- எந்த நாட்டில் தெரியுமா?
விஜய்யின் “தி கோட் ” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இலங்கை நடைபெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியிருக்கின்றது.
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய்.
லியோ திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து தளபதி 69 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
இலங்கையில் படப்பிடிப்பு
தி கோட் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் இருக்கும் என அறிவித்த நிலையில் இலங்கை நடந்து கொண்டிருக்கும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இலங்கை - கொழும்பு நடக்கும் இந்த படப்பிடிப்பில் ஸ்ரீகாந்த், வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர் இருக்கிறார்கள்.
இது தொடர்பான பூரண தகவல்கள் படக்குழு சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |