10 கிலோ தங்க சங்கிலி உள்பட 25 கிலோ தங்க நகைகள் அணிந்து திருப்பதிக்கு வந்த குடும்பத்தினர்
மும்பையைச் சேர்ந்த குடும்பத்தினர் 25 கிலோ தங்க நகைகள் அணிந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தனர்.
மும்பை குடும்பம்
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்திருந்தனர். இரண்டு சகோதரர்கள், அதில் ஒரு சகோதரரின் மனைவி ஆகிய மூன்று பேரும் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
இதில் இரண்டு சகோதரர்களும் 10 கிலோ எடையில் தங்க சங்கிலி, கையில் காப்பு, மோதிரங்கள் என்று 20 கிலோ தங்க நகைகளை அணிந்திருந்தனர்.
அதேபோல, அந்த பெண்ணும் 5 கிலோ எடை மதிப்பில் தங்க நகைகளை அணிந்திருந்தார். மொத்தமாக சேர்த்து மூவரும் 25 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்திருந்தனர்.
இவர்கள் மூன்று பேரை சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் விஐபி தரிசனத்தில் இருந்தவர்களும் ஆச்சரியமாக பார்த்தனர். மேலும் அவர்கள் தரிசனம் செய்துவிட்டு வந்த பிறகு செல்ஃபி எடுக்கவும் மக்கள் ஆர்வம் காட்டினர்.
பின்னர், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு காரில் ஏறி சென்றனர். இவர்கள் பாதுகாப்புக்கு மட்டும் 15 பேர் உடன் வந்திருந்தனர்.
VIDEO | Andhra Pradesh: Devotees from Pune wearing 25 kg of gold visited Tirumala's Venkateswara Temple earlier today.
— Press Trust of India (@PTI_News) August 23, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/k38FCr30zE