உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகள்! எந்த நாடு எவ்விடத்தில்?
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதன்படி ஒவ்வொரு நாடுகளும் எவ்விடத்தில் இருக்கின்றது என்பதை பார்க்கலாம்.
ஏழ்மையான நாடுகள்
தெற்கு சூடான் | இந்த முழு நாடும் ஏழ்மையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது சிறிய கிழக்கு ஆப்பிரிக்க நாடு. இங்கு 11.1 மில்லியன் (1.1 கோடி) மக்கள் தொகையுடன் மொத்த ஜிடிபி $29.99 பில்லியனைக் கொண்டுள்ளது. |
புருண்டி | இந்த நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடாகும். இது உலகின் ஏழ்மையான நாட்டின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $2.15 பில்லியன் ஆகும். |
மத்திய ஆப்பிரிக்க குடியரசு (CAR) | இந்த நாட்டில் 5,849,358 மக்கள் தொகை உள்ளது. இது உலகில் மூன்றாவது ஏழ்மையான நாடாகும். இந்த நாட்டில் தங்கம், எண்ணெய், யுரேனியம் மற்றும் வைரங்கள் நிறைந்த இருப்பு இருக்கின்றன. ஆனால் அரசியல் ஸ்திரமின்மை, ஆயுத மோதல்கள், 80 சதவீத குடிமக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஒரு தோல்வியுற்ற நாடாக அதை மாற்றியுள்ளன. |
மலாவி | இந்த நாடு தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இது உலகளவில் 4வது ஏழ்மையான நாடாக உள்ளது. 21,390,465 மக்கள் தொகை கொண்ட இந்நாட்டின் ஜிடிபி $10.78 பில்லியன் ஆகும். |
மொசாம்பிக் | கிழக்கு ஆப்பிரிக்காவில் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடு இது தான். இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நாடு கூடுதலாக இயற்கை பேரழிவுகள், நோய்கள், விரைவான மக்கள் தொகை வெடிப்பு, குறைந்த விவசாய உற்பத்தித் திறன் மற்றும் செல்வ சமத்துவமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |