மாஸ்க் போடலைன்னா நிறுத்துவீயா? காவலரை அசிங்கமாக பேசிய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில், பலரும் முககவசம் அணிவதையும், தடுப்பூசி போடவும் தயங்கி வருகின்றனர்.
அந்த வகையில், தஞ்சையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முக்கியமாக முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், சிலர் முககவசம் அணியாமல் வருகின்றனர்.
அப்படி, தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முக கவசம் அணியாமல் ஸ்கூட்டரில் ஒரு பெண் வந்துள்ளார்.
அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய போலீசார் 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு கூறியுளளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் காவலரை பார்த்து, இத்துனோண்டு மாஸ்குக்கு 200 ரூபாய் கட்ட சொல்றிங்களே உனக்கு அசிங்கமா இல்லையா என கேள்வி கேட்டுள்ளார்.
மேலும், காவலர், கலெக்டரை போய் கேளுமா என கூற, யோவ் கலெக்டரை கூப்பிடு அவன நானே கேட்கிறேன். எவனாயிருந்தாலும் மானத்தை வாங்கி விடுவேன் என ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
இதனை பணியில் இருந்த சக காவலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய, இதைக்கண்ட அந்த பெண், வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போடுறியா போடு, ஜெயில்ல போடுவியா போடு என்று தகாத வார்த்தையால் தெனாவட்டாக பேசியுள்ளார்.
ஒருகட்டத்தில், அந்த பெண் தோளில் போட்டிருந்த ஷாலை இழுத்து விட்டு கொண்டு நானும் ரவுடிதான் தான் பாத்துக்க என்று காவலரிமே மிரட்டுகிறார். இந்த வீடியோ காட்சி வைரலாகிய நிலையில், சம்பந்தப்பட்ட அந்த பெண் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.