68 வயதில் நடிகர் அர்ஜீனுக்கு சம்மந்தியான தம்பி ராமையா சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
68 வயதில் நடிகர் தம்பி ராமையாவின் சொத்து மதிப்பு பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி இந்த பதவில் முழுமையாக பார்க்கலாம்.
தம்பி ராமையா
தம்பி ராமையா என்பவர் தமிழகத் திரைப்படத்துறையின் நடிகரும் இயக்குனரும் ஆவார். வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்னும் படத்தை இவர் இயக்கி உள்ளார். இது தவிர கும்கி, கழுகு, தலைவா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மைனா திரைப்படத்தில் இவரின் நடிப்புக்காக இவர் துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.சில காலங்களாக நகைச்சுவை வேடங்களில் நடித்து பின்னர் சில வித்தியாசமான வேடங்களிலும் நடித்துள்ளார்.
தம்பி ராமையாவின் பெற்றோர் ஜகன்னாத பிள்ளை, பாப்பம்மாள் ஆவர். இவரின் மனைவி பொன்னழகு இவர்களுக்கு மகன் உமாபதி, மகள் விவேகா ஆகியோர் உள்ளனர்.இவர் சிறுவயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.
அப்போது அவருக்கு சினிமா மீது ஈர்ப்பு வந்ததால் சினிமாவில் நுழைந்தார். இதன் பின்னர் தனது திறமைகளால், உதவி இயக்குனர், பாடலாசியர், வசனகர்த்தா, துணை நடிகர், நகைச்சுவை நடிகர் நாளுக்கு நாள் வளர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இவர் ஒரு படத்திற்கு சம்பளமாக 25 லட்சம் வாங்குகிறார். இந்த நிலையில் இவரின் மொத்த சொத்து மதிப்பு 40 கோடியாக உள்ளது. இது தவிர சொந்தமாக ஒரு பிரமாண்ட வீடும் அதனுடன் சொகுசு கார்களும் அடங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |