பிரபல சீரியல் திடீர் நிறுத்தம்... கோபத்தில் கதாநாயகன் கூறிய பதில்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான தாலாட்டு சீரியல் திடீரென நிறுத்தப்பட்டதற்கான காரணத்தினை அதில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணா கூறியுள்ளார்.
தாலாட்டு சீரியல்
இல்லத்தரசிகளின் மனதை அதிகமாக கவர்ந்த இந்த சீரியலில் ஆரம்பத்தில் தாய் மகன் இருவரும் பிரிந்து காணப்படுகின்றனர்.
பின்பு இருவரும் ஒன்று சேர்ந்த தருணத்தினைத் தொடர்ந்து சந்திக்கும் பிரச்சினை, மாமியார் மருமகளை அன்பாக கவனித்துக் கொள்ளும் நிலை என்று அனைத்து கதைகளும் இல்லத்தரசிகளின் மனதை அதிகமாகவே கவர்ந்திருந்தது.
இந்நிலையில் இந்த சீரியலை பிரபல ரிவி திடீரென முடித்துள்ளது. இது நிறுத்தியதற்கான காரணம் தெரியாமல் மக்கள் தவித்து வந்துள்ள நிலையில், இதில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணா தனது கருத்தை கோபமாக கூறியுள்ளார்.
குறித்த சீரியல் வரும் ஆகஸ்ட் மாதம் வரை ஓடும் என்று முதலில் கூறியிருந்த நிலையில், தற்போது திடீரென நிறுத்தியதோடு, இதற்கான காரணத்தை கூட தங்களிடம் முறையாக கூறவில்லை... இதனால் எதற்காக இவ்வாறு பாதியில் நிறுத்தினார்கள் என்று எங்களுக்கே தெரியாது என்று கூறியுள்ளார்.
மேலும் அடுத்தடுத்து பல புது சீரியல்கள் ஒளிபரப்ப தயாராக இருப்பதாகவும், ஆதலால் இவ்வாறு பாதியில் முடீத்துவிட்டதாக தெரிவதாக காட்டமாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
