திடீரென தாலாட்டு சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்! அடுத்து இவர் தான் வருகிறாராம்....
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் சன்டிவிக்கு முக்கிய இடம் உண்டு. காலையில் தொடங்கி நள்ளிரவு வரை பல சீரியல்கள் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றன.
அதிலும், பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதால் , அடிக்கடி புதிய சீரியல்கள் ஒளிபரப்புவதில் சன்டிவி ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் தொடங்கியது தாலாட்டு சீரியல். இந்த சீரியலில் ஸ்ருதிராஜ், கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதால் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
குடும்ப உறவுகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாமல் தினசரிஎபிசோடுகள் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது 100 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ஒருவர் திடீரென சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
அவர், பல வருடங்களாக சன்டிவி தொடர்களில் நடித்து வரும் நடிகர் ரிஷிகேஷ் இந்த சீரியலில் நாயகனின் அப்பாவாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், தற்போது திடீரென இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
இவர் விஜய் டிவியின் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் அப்பாவாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தாலாட்டு சீரியலில் ரிஷிகேஷ் கதாப்பாத்திரத்தில் நடிக்க தற்போது பொள்ளாச்சி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.
காமெடி கலந்து வில்லன் கதாப்பாத்திரத்தில் கலக்கி வரும் பொள்ளாச்சி பாபு. சன்டிவியின் தங்கம் உள்ளிட்ட பல தொடர்களில் காமெடி மற்றும் வில்லன் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார்....