பிக் பாஸ் பார்த்துட்டு விஜய் கொடுத்த ரியக்சன்? தளபதி கேட்ட கேள்விக்கு சஞ்சீவ் கொடுத்த அசத்தல் பதில்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது குறித்து தளபதி விஜய்யிடம் சஞ்சீவ் கூறியது பற்றி நடிகர் சஞ்சீவ் பேசியுள்ளார்.
அதில், “பிக்பாஸ்க்கு போவதை பற்றி நான் விஜய்யிடம் சொன்னேன்.
நல்லா என்கரேஜ் பண்ணாரு. முதல்ல சிரிச்சான்.
சிரிச்சுட்டு.. பிக்பாஸ்.. நீ.. உள்ள போயி சமாளிச்சிருவ.. ஆமா நீ அதுக்குள்ள போயி என்ன பண்ணுவ? என்று கேட்டான்.
அதற்கு நான், கூப்டுறாங்க போறேன், முடிஞ்சவரைக்கும் ஜாலியா இருப்பேன், எதாவது பிரச்சனைனா நாமளும் சேர்ந்து பிரச்சனை பண்ண வேண்டிதான்.
நமக்கு என்ன தோணுதோ அதை செய்ய வேண்டிதான் என்று கூறினேன். பின்னர், சரி.. பாத்துக்கோ.. ஆல் தி பெஸ்ட்.. போய் ஒரு கலக்கு கலக்கிட்டு வா.. என்றார்.
பிக்பாஸில் இருந்து வெளிய போனதும், இதுபற்றி நானும் விஜய்யும் பேசினோம்.
உள்ள போகும்போது எப்படி போனியோ வெளில வரும்போது எந்த டேமேஜூம் இல்லாம நல்ல பேரோட வெளில வந்துருக்கனு எல்லாரும் சொல்றாங்க, அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ போனதுனால நானும் ரெகுலரா ஷோ பாக்க ஆரம்பிச்சேன் என்று விஜய் கூறினார்” என்று சஞ்சீவ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.