விற்பனைக்கு வந்த தளபதி விஜய் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார்.... விலை என்ன தெரியுமா?
நடிகர் விஜய்யை சர்ச்சையில் தள்ளிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் ரோல்ஸ் கார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், சினிமா மட்டுமின்றி அரசியலிலும் களமிறங்கியுள்ளார்.
தற்போதும் சர்ச்சைகளில் சிக்கிவரும் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினை என்றும் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது.
இதற்கு காரணம் நடிகை த்ரிஷாவுடன் விஜய் காட்டிவரும் நெருக்கம் தான் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் கார் என்று பேசினாலே பெரும்பாலான ரசிகர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் என்று தெரிந்துவிடும்.
இவர் இந்தியாவில் இந்த காரை இறக்குமதி செய்த போது இதற்கான வரி செலுத்தாததால், நீதிமன்றம் வரை சென்று ரூ.1 லட்சம் வரி செலுத்தியுள்ளார்.
தற்போது விஜய்யின் இந்த காரை விஜய் விற்பனை செய்ய உள்ளதாகவும், வெறும் 22 ஆயிரம் கி.மீட்டர் மட்டுமே ஓடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த கார் வாங்கி 14 வருடங்கள் ஆகியும் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் நல்ல கண்டிஷனில் வைத்துள்ளாராம்.
விலை என்ன?
காரினுள் இருக்கும் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் கூட எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் இந்த காருக்கு 2.6 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எம்பயர் ஆட்டோஸ் நிறுவனம் கூறியுள்ளது.
விஜய் பயன்படுத்தி தற்போது விற்பனைக்கு வந்திருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 1 மாடல். இது 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரோல்ஸ் ராயஸ் கோஸ்ட் சீரிஸ் 2 மாடல் விற்பனையில் இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 1 மாடலானது ரூ.4.5 கோடி முதல் ரூ.6 கோடி வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இந்தக் காரில் 6.7 லிட்டர், ட்வின்-டர்போ V12 இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 563hp பவர் மற்றும் 780Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |