டீன் ஏஜில் தல அஜீத்தா இது? தீயாய் பரவும் புகைப்படம்
தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் அப்டேட் ஒரு ஆண்டுக்கு மேல் வராமல் இருந்தாலும் அவரைப் பற்றின தகவல்கள் அவ்வப்போது வந்துகொண்டே தான் இருக்கின்றது.
இந்த நிலையில் அஜித்தின் டீன் ஏஜ் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அஜித் தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த புகைப்படத்தில் மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்களின் மகன் எஸ்பிபி சரண் அவர்களும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அஜீத் மற்றும் ஸ்பிபி சரண் ஒன்றாக படித்தவர்கள் என்று செய்திகள் வெளியான நிலையில் இந்த புகைப்படம் அதனை மீண்டும் உறுதி செய்துள்ளது.
அஜித் டீன் ஏஜ் வயதிலேயே அமைதியாகவும் அழகாகவும் இருப்பதை அஜித் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

