தைப்பூசம் ஸ்பெஷல்: மெய்சிலிர்க்க வைக்கும் முருகப்பெருமானின் பாடல்கள்
தைப்பூசம் (Thaipusam) என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும்.
தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாக இருப்பதுடன், அதிலும் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.
தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் தான் முருகப்பெருமான் ஞானபழம் கிடைக்காததால் தற்போதைய தமிழகத்தில் உள்ள பழநி மலையில் பண்டார கோலத்தில் தஞ்சமடைந்த நாளாக கடைப்பிடிக்கபடுகிறது.
நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
தைப்பூச திருநாளை நாளை கொண்டாட உள்ள நிலையில், முருக பக்தர்களை மேலும் பக்திக்குள்ளாக்கும் பக்தி பாடலின் தொகுப்பை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |