ஏ... நிறுத்து.. நிறுத்து... - சாலையில் சென்ற லாரியை நிறுத்தி யானை செய்த செயல்... - வைரல் வீடியோ...!
சாலையில் சென்ற லாரியை நிறுத்தி யானை ஒன்று செய்த காரியம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
லாரியை நிறுத்தி யானை செய்த செயல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தாய்லாந்தில் கரும்புகளை ஏற்றிகொண்டு லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது திடீரென சாலையில் வந்த யானை சென்றுக்கொண்டிருந்த லாரியை நிறுத்த முயற்சித்தது. உடனே லாரியை ஓட்டுநர் நிறுத்தினார்.
இதன் பிறகு லாரிக்கு பின்பக்கம் சென்ற யானை லாரியில் இருந்த கரும்புகளை அள்ளி கீழே போட்டது. பின்னர், அந்த கரும்புகளை ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிட்டது. இதை அவ்வழியாக சென்ற சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த யானைக்கு என்ன ஒரு சாமர்த்தியம்? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Elephant stops passing trucks to steal sugarcane, repeats the same thing with other trucks carrying sugarcane; 'Badaa imaandaar collector hai,' said a comment#viral #Trending #cutevideos #animalvideos #funnyvideos pic.twitter.com/ysRmHQMXaA
— HT City (@htcity) March 9, 2023