கோவில் பிரசாத புளிசாதம்... வீட்டிலேயே செய்வது எப்படி?
கோவில் கொடுக்கப்படும் பிரசாதத்தில் ஒன்றான புளியோதரையை வீட்டில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மசாலா பொடி அரைக்க
3 ஸ்பூன் - மல்லி விதைகள்
முக்கால் ஸ்பூன் - வெந்தயம்
4 - வர மிளகாய்
3 ஸ்பூன் - வெள்ளை எள்
1 - ஸ்பூன் மிளகு

புளிக்காச்சல் செய்ய
5 ஸ்பூன் - நல்லெண்ணெய்
1 டீஸ்பூன் - கடுகு
2 டீஸ்பூன் - கடலைப்பருப்பு
4 - வர மிளகாய்
1 டீஸ்பூன் - பெருங்காயத் தூள்
1.5 டீஸ்பூன் - மஞ்சள் தூள்
3 கொத்து - கறிவேப்பிலை
1/2 கப் - வேர்க்கடலை
தேவையான அளவு உப்பு
2 டேபிள் ஸ்பூன் - வெல்லம்
பெரிய எலுமிச்சை அளவு - புளி
1 கப் - அரிசி

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து மசாலா பொடி அரைக்க வேண்டிய பொருட்களை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து தனியாக வைக்கவும்.
புளி கரைசலுக்கு புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைத்து புளியை நன்றாக விதை மற்றும் நார் இல்லாமல் கரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, வரமிளாய், கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து புளி கரைசலையும் சேர்க்கவும். இதில் பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
பின்பு வறுத்த வேர்க்கடலை மற்றும் உப்பு, வெல்லம் இவற்றினை சேர்த்து, மூடி வைத்து 20 நிமிடம் கொதிக்க வைக்கவும். கடைசியில் அடுப்பை அணைத்துவிட்டு அரைத்து வைத்த மசாலா பொடியை சேர்த்து நன்றாக ஆற வைத்து, பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
சாதம் வடித்த பின்பு குறித்த புளியோதரை மிக்ஸ், சிறிதளவு உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கிளறினால் கோவில் ஸ்டைல் புளியோதரை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |