கோவில்களில் கொடுக்கப்படும் கயிறு! கையில் எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்?
பொதுவாக கோவில்களில் பிரசாதமாக கொடுக்கப்படும் கயிறுகளை நாம் கைகளில் கட்டிக்கொள்வது வழக்கம். இவ்வாறு கட்டிக்கொள்வதால் பல தீமைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே அனைவருக்கும் இருக்கும்.
ஆனால் நம் கைகளில் இந்த கயிறுகளை கட்டுவதில் கூட பல நன்மைகளும், விதிமுறைகளும் உள்ளது என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.
ஆம் கைகளில் கட்டப்படும் கயிறு எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்? எத்தனை முடிச்சு போட வேண்டும்? என்பதில் கூட பல நம்பிக்கைகள் உள்ளது.
கைகளில் கயிறு கட்டும் போது கவனிக்க வேண்டியவை
நாம் கைகளில் கயிறு கட்டும் போது கருப்பு கயிறாக இருந்தால் 9 முடிச்சுகள் போட்டு கட்ட வேண்டும். மற்ற கயிறாக இருந்தால் 5 முடிச்சுகள் போட வேண்டும்.
கயிறு கட்டும் போது இஷ்ட தெய்வ நாமத்தையோ அல்லது ஓம் நமசிவாய என்றே கூற வேண்டும். இவ்வாறு கயிறு கட்டுவதினால், விபத்து, பில்லி, சூனியம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்ட வேண்டும். ஆனால் வரலட்சுமி நோன்பு கயிறை எப்போதும் பெண்கள் வலது கையில் தான் கட்ட வேண்டுமாம்.
மேலும் நமது கையில் கட்டியிருக்கும் கயிறுகளை 48 நாட்கள் மட்டுமே கட்டியிருக்க வேண்டும். அதன் பின்பு கழற்றி நீர்நிலைகளில் மற்றவர்களின் கால்களில் படாதவாறு போட்டுவிட வேண்டுமாம்.