திருவிழாவில் பிணத்தின் தலையுடன் சாமியாடிய நபர்: பொலிசார் கொடுத்த அதிரடி
கோவில் திருவிழாவில் பிணத்தின் தலையை கையில் வைத்துக்கொண்டு சாமியாடிய நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணி கிராமத்தில் சக்திபோத்தி மாடசாமி கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளியில் திருவிழா கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த ஆண்டும் அதே போன்று நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் சிறப்பம்சமே சாமி ஆடுபவர்கள் வேட்டைக்கு சென்று இடுகாட்டில் உள்ள பிணத்தின் தலையை வெட்டி எடுத்து அதனை அரிவாள்களில் குத்திக்கொண்டு கோயிலுக்கு வந்து நிறைவு செய்வதுதான்.
அதன்படி திருவிழாவில் சாமி பூஜையின் போது சாமி ஆடுபவர் பிணத்தின் தலையை கொண்டு வந்து கோயில் முன்பு ஆடியுள்ளது, ஊர் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பார்க்கப்பட்டது.
இந்தத் திருவிழாவை காண பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தது மட்டுமின்றி, கொரோனா விதிகளும் கடைபிடிக்காமல் இருந்துள்ளனர்.
இது தொடர்பாக காவலர்கள் கோயில் நிர்வாகிகள் மற்றும் சாமி ஆடுபவர்கள் என 10 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் சாமியாடியவர்களின் கைகளில் இருந்த தலை, உண்மையான மனித தலையா? அல்லது போலியா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.