கை கால் வரல... கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை!
சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராகவ், பிரீத்தா ஜோடி. மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றனர். இதில், ப்ரீத்தாவின் கணவர் ராகவ் பல சீரியல்களில் மட்டுமல்லாமல், சினிமாவிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் மியூசிக் கம்போஸர், தொகுப்பாளர், இயக்குனர் என பல திறமைகளைக் கொண்டுள்ளார். இந்த நிலையில், ப்ரீத்தா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், “என்னுடைய அம்மாவிற்காக எல்லோருமே பிரார்த்தனை செய்யுங்கள்.
இன்னைக்கு காலையில் ஒரு சம்பவம் நடந்தது. அது என்னவென்றால், என்னுடைய அம்மா தவறி கீழே விழுந்து விட்டார். அதனால் அவர்களால் பேச முடியவில்லை, கை-கால் செயலிழந்து விட்டது.
இதற்கு முன்பே என் அம்மாவிற்கு இரண்டு முறை சர்ஜரி செய்து இருக்கிறோம். அதற்கான ட்ரீட்மெண்ட் போய் கொண்டிருக்கும் போது இடையில் இப்படி நடந்திருப்பது ரொம்ப மன வேதனையாக இருக்கிறது.
தயவுசெய்து எல்லோரும் என்னுடைய அம்மாவிற்காக வேண்டிக்கொள்ளுங்கள். அவர்கள் சீக்கிரம் குணமடைந்து வரவேண்டும்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.