அழுவதால் நன்மை உள்ளதா?
மனதுக்குள் தாங்கமுடியாத துக்கம் குடிக்கொண்டிருக்கும்போது அதை வெளிப்படுத்துவதற்கோ அல்லது அந்த துக்கத்தை குறைப்பதற்கோ இருக்கும் ஒரே விடயம் என்னவென்றால் அது அழுகை தான்.
அழுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அது துக்கத்திலும் வரலாம் சந்தோஷத்திலும் கோபத்திலும் வரலாம். ஆனால், அழுகை என்பது ஆரோக்கியமான ஒரு விடயமாக கூறப்படுகிறது.
கண்ணீர் வெளிவருவதனால் பல்வேறு நன்மைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்ணீரின் நன்மைகள்
கண்கள் வறண்டு போகாமலும் பார்வை மங்காமலும் இருக்க உதவுகிறது.
கண்களில் உள்ள தூசு, துகள்களை நீக்கி எரிச்சலை தடுக்க உதவுகிறது.
கண்ணீர் வடிவதனால் உடலில் எண்டார்ஃபின் மற்றும் அக்சிடோசின் ஆகியவை வெளியாகின்றன. இது ஃபீல் குட் கெமிக்கல் என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல் ஒரு குழந்தை பிறந்ததும் தாங்களாகவே சுவாசிக்கத் தொடங்குவதற்கு அழுகை உதவுகிறது. அதுமாத்திரமின்றி முதல் அழுகை ஒரு குழந்தையின் நுரையீரலை வெளி வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள உதவுகிறது.
கண்ணீரை சுரக்கும் லொக்ரிமல் சுரப்பியில் நரம்பு வளர்ச்சிக்கான புரதமொன்று உள்ளது. இது நியூரன்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாக ஏற்படும் நியூரல் பிளாஸ்டிசிட்டி அழும்போது மன நிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது.
அழுகையானது நரம்பு மண்டலத்தில் இனிமையான ஒரு விளைவை ஏற்படுத்தி உடல் மற்றும் மனதை ஓய்வெடுக்க செய்கிறது. கண்ணீரினால் உடலில் இத்தனை நன்மைகள் காணப்படுகின்றன. எனவே அழுகையை பலவீனமாகவோ அல்லது பாலினம் சார்ந்ததாகவோ கருதாமல் இயல்பான மனித உணர்வாக கருத வேண்டும்.