பாடம் சம்பந்தமாக விளக்கம் கொடுத்த மாணவி... ஆசிரியர் கொடுத்த தண்டனை! மாணவி பரிதாப பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தாக்கத்தை அடுத்து இறுதியாண்டு கல்லூரி மாணவர்கள் மட்டும் கடந்த சில வாரங்களாக கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் திருமங்கலம் பகுதியில் உள்ள கல்லூரியில் 3 ஆம் ஆண்டு கணிதம் பயின்று வந்த பத்மபிரியா எனும் மாணவி கடந்த 2 ஆம் தேதி வகுப்பறையில் இருநத சக மாணவர்களுக்கு பாடத்தில் உள்ள சந்தேகங்கம் தொடர்பாக விளக்கம் அளித்து இருக்கிறார். இதை வகுப்பிற்கு வந்த பேராசிரியர் முத்துக்குமார் பார்த்துவிட்டு, என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? எனத் திட்டியதோடு வகுப்பறைக்கு வெளியேயும் நிறுத்தி வைத்ததாகாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன அவர் மாலை வீட்டிற்கு வந்தவுடன் விஷத்தை அருந்தி இருக்கிறார்.
இதையடுத்து பத்மபிரியா மயங்கி விழுந்து இருக்கிறார்.
இதைப் பார்த்த பெற்றோர்கள் பதறிப்போய் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு பத்மபிரியா விஷம் அருந்தியதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் மேல் சிகிச்சைக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை பத்மபிரியா உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.